தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணி முதல் 12 வரை கும்பாபிஷேக விழா நடைபெற்றது  .


அட! அது நான் இல்லப்பா!! பெயரால் வந்த குழப்பம்! வழிமாறிப்போன பிரதமருக்கான வாழ்த்து!


இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 4ந் தேதி முதற்கால யாக பூஜைகள் நடந்தது. பின்னர் 5ஆம் தேதி காலை 9 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜையும், இரவு மாலை 6 மணி அளவில் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.


Watch video : அசந்து தூங்கும் குட்டியானை.. குடைபிடித்து பாதுகாக்கும் தமிழக வனத்துறையினர்.. இந்த க்யூட்டியை பாருங்க..


இன்று  7-ந்தேதி (புதன்கிழமை) காலை 7.15 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் கோ பூஜை,மஹா பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள்  மணிக்கு  விமான மகா கும்பாபிஷேகம், மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  பாராளுமன்ற உறுப்பினர் பா.வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 


Somalia : கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறப்பார்கள்! ஐநா சொன்ன பகீர் தகவல்! சோமாலியாவின் சோகம்!


15 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம் என்பதால்  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண