இந்து மதத்தில் ஆண் தெய்வங்கள் பெண் தெய்வங்களை எந்த நேரத்தில் வணங்க வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது. அந்தந்த கடவுளுக்கு உகந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வது கூடுதல் பலனைத் தரும். அதன்படி அனுமனை அதிகாலையிலும் மாலையிலும் வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்து புராணஙக்ளின்படி ஹனுமனை வணங்குவதால் கிரக தோசம் நீங்கும், வளங்கள் பெருகும் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ஹனுமனை மதிய வேளையில் வணங்கக் கூடாது என்பதும் ஐதீகம் எனக் கூறுகிறார் வாஸ்து நிபுணர் ஹிதேந்திர குமார் ஷர்மா. அதேபோல் காலையில் குளித்த பின்னரே ஹனுமனை வணங்க வேண்டும் இல்லாவிட்டால் தோஷங்கள் ஏற்படலாம் என்றும் கூறுகிறார்.


ஹனுமன் யார்?


புராணத்தில் வீரத்தையும், ஞானத்தையும் தந்து தருளம் கடவுள் ஹனுமன். சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் ஹனுமான் ஜி, ராமபக்தன், ஹனுமான், பஜ்ரங்பாலி, பவன்புத்ரா, அஞ்சனி புத்ரா, ஆஞ்சநேயர் போன்ற பெயர்களால் அறியப்படுகிறார். இவரைத் தொடர்ந்து வழிபட்டால் வலிமையும், உறுதியும் கொண்ட மனப்பலம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதோடு மனதார எண்ணெய் விளக்கு, வடமாலை செலுத்தி வழிபடும் போது அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு அனுமன் தீர்வு காண்பார் என்று கூறப்படுகிறது. 


இன்றைய சூழலில் மக்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றான பண பிரச்சனைக்குத் தீர்வு காண்பதோடு பிரச்சனையிலிருந்து விடுபட ஹனுமன் வழிபாடு உகந்ததாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக நம்பப்படுகிறது


பொதுவாக இந்து மதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை புனித நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக ஹனுமனுக்கு உகந்த செவ்வாயில் அனுமனை வழிபட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.


குறிப்பாக உங்களது வேலையில் அல்லது வாழ்க்கையிலோ? பணப்பிரச்சனை அடிக்கடி ஏற்படும் போது ஹனுமனுக்கு செவ்வாய் அல்லது நல்ல நேரத்தில் சில வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் ஹனுமன் கோவிலுக்குச் சென்று கடுகு எண்ணெயில் மண் தீபம் ஏற்றி அனுனை வழிபட வேண்டும்.
 
மாலையில் ஹனுமனை வணங்கினால்:


அதிகாலையில் குளித்துவிட்டு ஹனுமனை வணங்கினால் ஒரு நன்மை ஏற்படும் என்றால் மாலை வேளையில் ஹனுமனை வணங்குவதால் அமைதியும் மனநிம்மதியும் கிட்டும் எனக் கூறுகிறார் வாஸ்து நிபுணர் ஹிதேந்திரா.


ராமாயணத்தில் விபீஷனனுக்கு ஹனுமன் மீது தீரா அன்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஹனுமனை இலங்கையிலேயே தங்கிவிடும் படி வேண்டினார். தீவிர ராம பக்தனான ஹனுமன் அதனை ஏற்றுக் கொண்டாலும் பகலில் உங்களுடன் இலங்கையில் இருப்பேன். மாலையில் திரும்பிவிடுவேன் என்று உடன்படிக்கை போட்டார். அதனாலேயே இலங்கையில் இருந்து ஹனுமன் திரும்பும் மாலை வேலை அவரை வணங்க சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது.


ஹனுமன் சாலிஸா:


ராமபிரானின் தீவிர பக்தனாக விளங்கிய பழம்பெரும் கவியான துளசிதாஸ் அவர்களால் இயற்றப்பட்டதே ஆஞ்சநேயர் மந்திரங்கள். இது 40 கவிதை செய்யுளை கொண்டுள்ளது. அதனால் தான் 'சாலிசா' என ஹிந்தி மொழில் கூறுகிறார்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களில் சில வகையான இறைதன்மையுள்ள ரகசியங்கள் அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இறைதன்மை கொண்டுள்ள இந்த 40 செய்யுள்களை, வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஓதலாம். சில முறைகள் ஓதினால் போதும்


காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்.