இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் அனைத்து கோயில்களிலும் விழா வழிபாடுகள் நடைபெறும். இதுதவிர விழாவையொட்டி வீடுகளில் மக்கள் பூஜைகள் செய்து விநாயகருக்கு கொளுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடத்தப்படுவர். மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும்.
Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!
திண்டுக்கல்லில் ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 32 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் ஆன மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். 108 விநாயகர்கள் நந்தவனத்தில் அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் பொதுமக்கள். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்திவ்விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவிலில் ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான ஒரே கல்லில் ஆன 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சிலை உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 07.09.24 சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 32 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை முன்பு பூந்தோட்ட நந்தவனத்தில் பல விநாயகர் அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கம் மேல் அமர்ந்த விநாயகர், ராமர் விநாயகர், புல்லட் ஓட்டும் விநாயகர், தாமரை மேல் அமர்ந்த விநாயகர், அன்னம் மேல் அமர்ந்த விநாயகர், எலிமேல் அமர்ந்த விநாயகர், தர்பார் மேல் அமர்ந்த விநாயகர் என ஒன்றரை அடி உயரத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புல்லட் விநாயகர், குழந்தை விநாயகர், வேடன் விநாயகர் போன்ற பல்வேறு சிலைகள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களே கவர்ந்து வருகிறது. விநாயகர் சிலைகளை பார்க்க வந்த பொதுமக்கள் விநாயகர் சிலைகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.ஆசியாவிலேயே மிக உயரமான 32 அடி உயரம் கொண்ட விநாயகரை காண திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பல கிராமங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து விநாயகர் தரிசனம் செய்ய பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.