இந்தியாவில் கொண்டாடப்படும் இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமானது ஆகும். நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம் ஆகும்.
விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்:
தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து வழக்கப்படுவது வழக்கம். இதையடுத்து, கடந்த ஒரு மாதமாகவே விநாயகர் சிலைகள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் உற்பத்தியாளர்கள் விநாயகர் சிலைகள் செய்வதை தீவிரப்படுத்தியுள்ளனர். பெரும்பாலான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால், வர்ணம் உலர்வதற்கு சில நாட்கள் எடுக்கும் என்பதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் வர்ணம் பூச வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை உலரவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு அடி முதல் 15 அடி வரை:
வழக்கத்தை விட நடப்பாண்டில் விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் அதிகளவு குவிந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விதித்துள்ள விதிப்படி 15 அடி வரை விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் பொதுவாக 10 அடிக்கும் குறைவில்லாமல் உயரமாக இருக்கும் என்பதால் அந்த சிலைகளை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கும் பணிகளில் சிலைகளை ஆர்டருக்கு அளித்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் மட்டுமின்றி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபடவும் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. இதனால், வீடுகளில் வழிபடுவதற்கு ஏதுவான சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை செய்வதிலும் உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்:
மேலும், விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அதற்கேற்ற வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை வழக்கத்தை விட அதிகளவு பலப்படுத்தியுள்ளனர்.