விநாயகர் சதுர்த்தி 2025 - பூஜை செய்ய சிறந்த நேரம் எது?

எப்போது , எப்படி கொண்டாட வேண்டும்..?

தேதி- 27 ஆகஸ்ட் 2025 

பத்ர சுக்ல சதுர்த்தி தேதி தொடங்குகிறது - ஆகஸ்ட் 26 மதியம் 1:54 மணி

பத்ர சுக்ல சதுர்த்தி தேதி முடிவடைகிறது - ஆகஸ்ட் 27 பிற்பகல் 3:44 மணி சுக்ல யோகம் - ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 28 வரை மதியம் 12:35 முதல் மதியம் 01:18 வரை

பிரம்ம யோகம் - ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 29 வரை மதியம் 01:18 முதல் 02:13 வரை 

ராகுகாலம் - மதியம் 12:22 முதல் 01:59 வரை 

நண்பகல் பூஜை நேரம் - ஆகஸ்ட் 27 காலை 11:05 மணி முதல் மதியம் 01:40 மணி வரை.

ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது....

ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரமாக குறிப்பிடப்படுகிறது...

27ம் தேதி மாலையில் சதுர்த்தி திதி இருக்காது என்பதால் காலை முதல் பகல் வரையிலான நேரத்திற்குள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை நிறைவு செய்து கொள்வது நல்லது

“விநாயகர் சதுர்த்தி வரலாறு” :

விநாயகரின் தோற்றம் பற்றி பல்வேறு புராண கதைகள் நம்மிடத்தில் இருந்தாலும் பார்வதி தேவி களிமண்ணால் விநாயகரை உருவாக்கினார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான புராணக்கதை....

 ஒரு சமயம் பார்வதி களிமண்ணை கொண்டு ஒரு சிற்பத்தை வடிவமைத்தார்... அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதற்கு உயிரும் கொடுத்து தன் பிள்ளையாகவே வளர்க்க ஆரம்பித்தார். அந்த சிற்பம் செய்யும் போது கையில் களிமண் பட்டதால், தன் மகனிடம் நான் குளிக்க செல்கிறேன் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு பார்வதி தேவி சென்றதாகவும், அந்த சமயத்தில் சிவபெருமான் உள்ளே நுழைய முயற்சி செய்யும்போது சிறுவனாக இருந்த பார்வதியின் மகன், சிவபெருமானை தாய் குளிக்கிறார்... யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்திருக்கிறார்... இதில் கோபமுற்ற சிவபெருமான், அந்த சிறுவனின் தலையை துண்டித்திருக்கிறார்... வெளியே நடப்பது என்னவென்று தெரியாத பார்வதி தேவியோ... வெளியில் வந்து பார்த்தபொழுது அதிர்ச்சி அடைந்து, சிவபெருமானிடம்  சிறுவனுக்கு இன்னொரு தலையை பொருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்....

 சிவபெருமானும் தன் பக்தர்களிடம் முதலில் நீங்கள் பார்க்கும் ஜீவ ராசியின் தலையை எடுத்து வரும்படி கட்டளையிட்டதன் அடிப்படையில்... யானையை முதலில் பார்த்ததால்... யானையின் தலையை எடுத்து வந்து தலையில்லாத சிறுவனின் உடலை பொருத்தினார்.... இவ்வாறு தான் நம் விநாயகருக்கு யானை முகம் கிடைத்தது... மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் காலத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது... இதை பால கங்காதர தழகர் ஒரு தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என்று சிறுத்தை எடுத்து இருக்கிறார்...

 பின்னர் சிவபெருமான் விநாயகரை தன்னுடைய கணங்களின் தலைவனாக கணபதி என்று நியமித்து அவருக்கு அனிமா, மகிமா போன்ற அஷ்ட சித்திகளையும் அளித்து சிறப்பிக்கிறார்... பிரம்மதேவன் தான் படைக்கும் அனைத்து படைப்புகளும் இடையூன்றி நிறைவேற வேண்டும் என்று வரத்தை கேட்கிறார் அப்படியே பிரம்ம தேவனுக்கும் விநாயகர் வரத்தை கொடுத்து கையில் கொழுக்கட்டையை ஏந்தி நின்று வரமும் அளிக்கிறார்...

 இதை நினைவு கூறும் வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை, விநாயகர் சதுர்த்தி அன்று  மக்கள் செய்து, அவரை வழிபட்டு தங்களின் துன்பம் போக வேண்டும் என்றும், ஞானம், அறிவு, செழிப்பு, செல்வம், நீண்ட ஆயுள், குடும்ப சேமம், பிணி நீங்குவது போன்ற அனைத்து நல்ல காரியங்களும் தங்களுக்கு நிறைவேற வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்பர்....