விழுப்புரம் : வானூர் அருகே தென்சிறுவளூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ஆதி உத்திரகாளி அம்மன் ஆலய ஆடி உற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தென்சிறுவளூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஆதி உத்திரகாளி அம்மனுக்கு ஆடி உற்சவம் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக காலை 108 பால்குடம் ஊர்வலம் கிராம வீதிகளின் வழியே உலா வந்து கோயிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு 108 பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், வேல் குத்துதல், ஆகியவே நடைபெற்றன.
மேலும் மூலவர் ஆதி உத்தரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 1008 வளையல்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ ஆதி உத்திர காளி அம்மன் வளம் வந்தார். மேலும் பழங்கள், பிஸ்கட் பாக்கெட்களலால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஆதி உத்திர காளி மற்றும் முருகர் டியூக் வண்டி ஓட்டிக்கொண்டு வருவது போல் வீதி உலா வந்தனர். இதில் பக்தர்கள் சாமி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் திண்டிவனம், வானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் மற்றும் குழந்தை வரம் :
திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாதவர்கள் பலரும், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தென்சிறுவளூர் கிராமத்தில் இருக்க கூடிய ஸ்ரீ ஆதி உத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்ற பின்னர் குழந்தை வரம் பெற்றிருக்கிறார்கள் என பரவலாக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து வேங்கடத்தம்மனை வழிபடுபவர்களுக்கு, உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, குழந்தை வரம் அம்மனால் வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இது தவிர, பிரசவத்தில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாமல் இருக்க கர்ப்பமாக உள்ள பெண்களும் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை வழிபடவரும் தம்பதியில், பெண் அம்மனை மனமுருகி வேண்டி, இங்கு குழந்தை வரம் வேண்டுவோர் செய்யும் படி பூஜை எனும் சிறப்பு பூஜையைச் செய்து வழிபடவேண்டும். அதன் பின்னர் அம்மனின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கினை உடலில் பூசி வந்தால், குழந்தை பெறுவதில் இருக்கிற தடைகளை நீங்கி, குழந்தை வரம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறு வழிபட்டு குழந்தை வரத்தினை பெற்றவர்கள், கர்ப்பமாக இருக்கும் போது, மீண்டும் வந்து அம்மனை தரிசித்துவிட்டு, நேர்த்திக் கடனாக தொட்டில், வளையல் போன்ற பொருட்களையும் சமர்பித்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.