எந்த ஒரு செயலை செய்தாலும் முழு முதற்கடவுள் விநாயகரை வணங்கிதான் நாம் தொடங்குகிறோம். ஆலமரமோ, அரச மரமோ அதன் அடியில் அமைதியாக வீற்றிருக்கும் பிள்ளையார் நன்மைகள் பலவற்றை நமக்கு வாரி வழங்கும் கடவுள்.
வினைகள் தீர்க்கும் விநாயகர்:
ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக விநாயகர் படம் இருக்கும். சிலர் விநாயகர் சிலையை வைத்து வணங்குவார்கள். அப்படி நீங்கள் வணங்கும் விநாயகர் சிலையானது எப்படி இருக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் நாம் வைத்து வணங்கும் விநாயகரின் சிலையானது துதிக்கை இடது பக்கம் இருக்குமாறு இருக்க வேண்டும். அதுபோன்ற சிலைகளை மட்டுமே வீட்டில் வைத்து வணங்க வேண்டும். அமர்ந்த கோலத்தில் இருக்கும் விநாயகர் சிலையை வைப்பதே அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும்.
எந்த திசையில் வைக்க வேண்டும்?
நமது கவலைகளை மனம் விட்டு கொட்டித்தீர்க்கும் இடமாகவே பலருக்கும் விநாயகப்பெருமான் உள்ளார். வெள்ளை நிற விநாயகரை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி வீட்டில் பெருகும். விநாயகரின் படத்தை மாட்டும்போது அதன் பின்புறம் நமது வீட்டு வாசலை நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் வடகிழக்கு மூலைதான் விநாயகர் சிலை வைப்பதற்கு சரியான இடம் ஆகும். அந்த திசையிலே பூஜை அறை வைப்பதும் நல்லது ஆகும். வடகிழக்கு மூலையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் விநாயகர் சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறு இருக்கும்படி வைக்க வேண்டும். வீட்டில் கிழக்கு அல்லாவிட்டால் மேற்கு திசையை பார்த்தவாறு விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.
வைக்கக்கூடாத திசை:
விநாயகர் சிலையை எந்த சூழலிலும் தெற்கு திசையை நோக்கி வைக்கக்கூடாது. அதேபோல, கழிவறைக்கு அருகிலோ அல்லது குளியலறை சுவர் விநாயகர் சிலை இருக்கும் சுவருடன் ஒட்டியோ இருக்குமாறு சிலையை வைக்கக்கூடாது. அதேபோல, படிக்கட்டிற்கு கீழே ஒருபோதும் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. அதேபோல, படுக்கை அறையில் விநாயகர் சிலையோ, படமோ வைப்பது சரியல்ல.
வாஸ்து சாஸ்திரப்படி முழு முதற்கடவுள் விநாயகப்பெருமானை சரியான திசையில் வைத்து வணங்கினால் பிள்ளையாரின் அருள் கிடைக்கும்.
மேலும் படிக்க: ஆறு அடி உயர எருமை வாகனம்.. முறுக்கிய மீசையுடன் எமதர்மராஜா.. ஆடி மாதத்தில் எமனுக்கு பெரும் திருவிழா!
மேலும் படிக்க: ஆடி மாதம் 3வது வெள்ளி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்