காஞ்சிபுரம் மாவட்டம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(வி)லிட், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்தார்.

ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ் கடவுளாக,  பக்தர்களால் வணங்கப்படும் முருகன் கடவுளுக்கு, அறுபடை வீடுகளில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம்,  திருத்தணியில்  அமைந்துள்ள  முருகர் கோவில் ( Arulmigu Thiruthani Murugan Temple ) விளங்கி வருகிறது. ஆடி கிருத்திகை முன்னிட்டு இந்த கோவிலில்  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி   கிருத்திகையை முன்னிட்டு,  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுப்பது  நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருத்தணியில் குவிவது வழக்கம்.  தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தமிழ் கடவுள் முருகனை வணங்கி செல்வார்கள்.  கிருத்திகை மற்றும் அதற்கு முன்னால் வரும்  பரணி ஆகிய நட்சத்திரத்தின் பொழுது,  பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம் எனவே இதனை முன்னிட்டு  பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் – திருத்தணி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(வி)லிட்., காஞ்சிபுரம் மண்டலம். 09.08.2023 அன்று ஆடிக்கிருத்திகை பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 07.08.2023 முதல் 10.08.2023 வரை கீழ்கண்ட மார்கங்களிலிருந்து திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் அடர்வுக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.

 

 

காஞ்சிபுரம் – திருத்தணி

100

அரக்கோணம் – திருத்தணி

25

சென்னை – திருத்தணி

100

திருப்பதி - திருத்தணி

75

                  மொத்தம்

300