பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ் பெற்றது அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும் கோவில் சுமார் 25-ஏக்கர் பரப்பளவில் நான்கு கோபுரங்கள் மற்றும் கட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும். ஐந்து சிறிய கோபுரங்களுடன் மொத்தம் 9 கோபுரங்களுடன் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்த திருக்கோவில் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு பகுதியில் அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 17-ம் நூற்றாண்டில் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக வரலாறு உண்டு, இந்த கோபுரம் 171 அடி உயரம் கொண்டது. அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தின் வெளிப்புறம் வலது பகுதியில் பிரம்மதேவன் சிலையும் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதி உடைந்து இன்று கீழே விழுந்துள்ளது. இந்த நிகழ்வு சிவ பக்தர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 1100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு அண்ணாமலை திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டு அண்ணாமலையார் திருக்கோவிலின் ராஜகோபுரத்தில் அடித்தள விமானத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வல்லுநர் குழுக்களை கொண்டு சரி செய்தார்கள். இதனையடுத்து அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பாவை சிலையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலும் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதிகள் உடைந்து கீழே விழுந்ததால் பக்தர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பல கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானமாக வரும் நிலையில் அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள கோபுரங்களில் உறுதி தன்மையை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வல்லுநர் குழுக்களை கொண்டு கோவில் கோபுரங்களின் உறுதி தன்மையையும் கோபுரங்களில் அமைந்துள்ள சிலைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
தற்போது கார்த்திகை தீப திருவிழா தொடங்க உள்ளது, சீக்கிரமா பிரம்மா சிலையை உடனடியாக தயார் செய்ய வேண்டும் மேலும் அனைத்து கோபுரங்களிலும் உள்ள சிலை சரியாக உள்ளதா என பார்த்து சீரமைக்க வேண்டும். காவிரி விவகாரம்; மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகா - தமிழ்நாட்டுக்கு நெருக்கடி