திருவானைக்காவல் அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-ஆவது சிவத்தலமாகும். மேலும் சுமார் 2500 வருட மிகவும் பழமையான இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபடத் திருமணத் தடைகள் நீங்கும், சகல தோஷங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை உண்டு. இத்தகைய புகழ்பெற்ற தளத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் வெகு விமர்சையாக சிறப்புகள் பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தை பொருத்தவரை எல்லா வைபவங்களிலும் அம்மனுக்கே முதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பங்குனி மாதமும் 48 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்,  இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.

 



 

இந்நிலையில் இன்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசனம் செய்வதற்காக திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களுக்கான குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது - மேலும் திருவானைக்காவல் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண