அதிக கடனாளியாக இருக்கிறீர்களா, நோயின் தாக்கம் உச்சகட்டமாக இருக்கிறதா, திருமணமாகவில்லையா, குழந்தை பிறக்கவில்லையா, வீடு கட்ட முடியவில்லை, வாகனம் வாங்க முடியவில்லை, நல்ல வேலை கிடைக்கவில்லையா, வெளிநாடு செல்ல முடியவில்லை, உற்றார் உறவினரோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை, பணம் சேரவில்லையா... கவலை வேண்டாம் உங்களுக்காக இதோ ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் பௌர்ணமி உடன் கூடிய சுப தினத்தில் மகாலட்சுமியின் அம்சமான வரலட்சுமிக்கு விரதம் இருந்தால் வரங்களை அள்ளித்தர அவர் தயாராக இருக்கிறார்...
எப்படி விரதம் இருக்க வேண்டும்..?
விரதம் என்பது உடலை அதிகப்படியாக வருத்திக் கொள்வது அல்ல நாம் விரும்பும் உணவை சற்று தவிர்த்து மகாலட்சுமியை நோக்கி விண்ணப்பத்தோடு கூடிய தெய்வ பக்தியை காட்டுவது... முடிந்தவர்கள் காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரை விரதம் இருக்கலாம் அதுவும் கூட பால் பழம் அருந்தலாம்... வயிறு நிரம்பும் வரை சாப்பிடக்கூடாது... காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டு வாசலில் கோலமிட்டு மங்களகரமாக மஞ்சள் தெளித்து மகாலட்சுமிக்கு அலங்காரம் செய்து பூஜைக்கு தேவையான பொருட்களை முறையாக லட்சுமிக்கு அர்ப்பணித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.... லட்சுமி ஜெபத்தை ஜெபிக்கலாம், காயத்ரி மந்திரத்தை கூறலாம்... குறிப்பாக திருமணமான பெண்கள் கணவனுக்காக குடும்பத்துக்காக விரதம் இருப்பது வழக்கம்.... அதேபோல திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்றும் விரதம் இருப்பார்...
மாங்கல்ய பாக்கியத்தை அருளும் வரலட்சுமி!!!
திருமணமான பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் நலனை கருத்தில் கொண்டும் நீண்ட ஆயுளை வேண்டியும் வரலட்சுமிக்கு விரதம் இருப்பார்கள்... தொடர்ந்து குடும்ப சேமத்திற்காகவும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் விரதத்தை கடைபிடிப்பார்... பெண்கள் மட்டும் தான் விரதம் இருக்க வேண்டுமா ஆண்கள் இருக்கக் கூடாதா என்றால் நிச்சயமாக லட்சுமி ஆண்கள் இருந்தாலும் அவருக்கும் அவருடைய வாழ்க்கை துணையான மனைவியை ஆசிர்வாதம் செய்து கேட்ட வரங்களை அவருக்கும் கொடுப்பார் என்பது தான் உண்மை... திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வாழ்க்கை துணை வேண்டி காத்திருக்கும் தருணத்தில் வரலட்சுமி விரதத்தை கடை பிடித்தால் மனம் விரும்பிய மாங்கல்யம் அமையும்...
என்ன தானம் கொடுக்கலாம்...!!!
இந்த வரலட்சுமி விரத தினத்தில் பசுவுக்கு நீங்கள் கீரையை தானமாக கொடுக்கலாம் பாயாசம் செய்து அக்கம் பக்கத்தில் கொடுக்கலாம் இனிப்பு வகைகளை சிறுவர்களுக்கு கொடுக்கலாம் சுமங்கலிகளுக்கு புடவை வாங்கி கொடுக்கலாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு வளையல் வாங்கி கொடுக்கலாம் ஊனமுற்றோருக்கு உணவு வாங்கி கொடுக்கலாம் இப்படியாக இந்த தினத்தில் உங்களால் முடிந்ததை நீங்கள் தானமாக கொடுக்கலாம்.... இப்படி செய்வதன் மூலம் உங்களின் பழைய கர்மாக்கள் கழிந்து நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை….