வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய நிகழ்வான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுவாமி பண்டரிநாதன் பரம பத வாசல் வழியாக வந்தார். அதை தொடர்ந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் அந்த வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இன்று பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் மற்றும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூரில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கரூர் பண்டரிநாதன் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பண்டரிநாதன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய நிகழ்வான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுவாமி பண்டரிநாதன் பரம பத வாசல் வழியாக வந்தார். அதை தொடர்ந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் அந்த வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரத வாகனத்தில் கொழுவிற்க செய்தனர். பிறகு மேள தாளங்கள் முழங்க சுவாமியின் திருவீதி விழா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.
அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பரமபத வாசல் வழியாக வந்தனர். கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நிகழ்ச்சியில் ஏற்பாட்டை பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.