வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு... நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

Continues below advertisement

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து சென்றார். தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

மேலும் பள்ளி அக்ரஹாரம் வீரநரசிம்மர், மணி குன்றா பெருமாள் மற்றும் நீல மேகப் பெருமாள் கோயில் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பள்ளி அக்ரஹாரம் வீர நரசிம்மர், மணிக்குன்ற பெருமாள், நீலமேகப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 4.30 மணி அளவில்  நடைபெற்றது.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசத்தில் 8வது திவ்ய தேசமாகவும், பஞ்சரங்கனின் ஒன்றாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடந்த்து. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

கும்பகோணம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை  சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளாமான  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனைகள் நடந்தது.
 
வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இக்கோயிலில், பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு தரிசன  வழிபாடு நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாள் முழுவதும் தரிசித்தனர். பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola