மது அருந்தி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொன்ன சாமியார்; கடைசி வரைக்கும் இந்த ஆட்சி குழப்பத்தில் தான் போகும்-  பேட்டியளித்த சாமியார்.





தூத்துக்குடி மாவட்டம்,  முத்தையாபுரத்தில் உள்ள தோப்பு தெருவில் ஸ்ரீமாளிகைபாறை கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற கொடை விழாவில் கடற்கரைக்கு சென்று தீர்த்தம் எடுக்கப்பட்டு முருகன் என்ற சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடினார். 




பின்னர் சாமிக்கு கிடா பலியிடப்பட்டு பின்னர், டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட புல், ஆஃப் என நூற்றுக்கு மேற்பட்ட மது பாட்டில்களும் அங்கே காணிக்கையாக குவிக்கப்பட்டு மதிய நேரத்தில் சாமி அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.  அப்போது திடீரென இருவர் அரிவாளை பிடிக்க நால்வர் சாமியை பிடிக்க திடீரென அரிவாள் மீது ஏறி அதில் நின்றவாறே சரக்கை  (மது) பாட்டில்களை திறந்து மடக் மடக்கென குடித்து தள்ளினார்.  




இடையிடையே அவருக்கு என ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட மட்டன் கொடுக்கப்பட்டது. அதையும் வாங்கி சாப்பிட்ட சாமி, சுருட்டையும் புகைத்து தள்ளினார். தொடர்ந்து சரக்கை குடித்துக் கொண்டிருந்த சாமியிடம் பக்தர்கள் குறைகளை சொல்ல, அதற்கு சாமி அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தை இல்லை என்று ஒரு பெண்மணி, சரக்கு பாட்டில் கொடுத்து வரம் கேட்டார். உடனடியாக அடுத்த வருடம் குழந்தை வரம் கிடைக்கும் என்ற கூறியவாறு நீ செய்தி எப்டி போட்டாலும் பரவாயில்லை .. என்பிள்ளை என்னை தேடி வந்துள்ளது என்றார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், "இந்த வருடம் பிறக்கும் போது சித்திரை ஒன்று நாடு செழிக்கும்.. நல்ல மழை பெய்யும், குறை இல்லாமல் கருப்பசாமி காப்பாற்றி கொடுப்பார் சரிதானே என்ற அவர், அரசியல் கேள்விக்கு பதிலளித்த அவர், தினம் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. கடைசி வரைக்கும் ஆட்சி இந்த குழப்பத்தில் தான் போகும். ஏற்றுமதி, இறக்குமதிக்கு கஷ்டப்படத் தேவையில்லை... உள்நாட்டிலே எல்லாம் செய்து கொடுத்து விடுவேன்.




எந்த மக்களும் கஷ்டப்படத் தேவையில்லை.. என்ற அவர் அதேபோல வருஷத்துக்கு ஒரு தடவை ஆடி மாசம் கடைசி வெள்ளி கருப்பசாமி குறை இல்லாத அளவுக்கு தீர்த்துக் கொண்டிருக்கிறேன். மக்களை காப்பாற்றி வருகிறேன். இங்கு கருப்பசாமிக்கு வரி வசூல் கிடையாது... கருப்பசாமி கொடுத்த நன்மைகள் பலனடைந்த மக்கள் கொடுத்த திருவிழா தான் நடந்து கொண்டிருக்கிறது" என்றார். மேலும், பக்தர்கள் அளிக்கும் சரக்கை கணக்கில்லாமல் குடித்த சாமிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம்.