இந்தியாவிலுள்ள மிகவும் பெரிய கோயில் தேவஸ்தான போர்டுகளில் ஒன்று திருமலை திருப்பதி தேவசம் போர்டு. திருப்பதி ஏழுமலையான் கோயிலை சார்ந்து உள்ள இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல நூறு கோடிகளுக்கு மேல் நன்கொடை வருவது வழக்கம். இதன்காரணமாக திருமலை தேவஸ்தானம் போர்டு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது டிடிடி சார்பில் புதிதாக 111 கோயில்கள் கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இது தொடர்பாக டிடிடி குழு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிடிடி நிர்வாக அலுவலர் தர்ம ரெட்டி, “திருப்பதி தேவசம் போர்டு சார்பில் இந்து சனார்தன தர்மத்தை பரப்பும் வகையிலும், பெருமாலின் புகழை பரப்பும் வகையில் புதிதாக கோயில்கள் கட்டப்படும். குறிப்பாக பின் தங்கியுள்ள பகுதிகளில் இந்த புதிய கோயில்கள் கட்டப்படும்.


 




ஏற்கெனவே முதல் கட்டமாக 502 கோயில்கள் கட்டும் பணிகளை டிடிடி எடுத்துள்ளது.இதன் இரண்டாம் கட்டமாக 111 புதிய கோயில்களை டிடிடி கட்ட உள்ளது. இது ஆந்திராவிலுள்ள 26 மாவட்டங்களில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்படும். இந்த கோயில்களின் கட்டுமானத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலைய நிர்மனம் என்ற நிதியிலுள்ள தொகை செலவிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 


இந்தக் கூட்டத்தில் திருப்பதி கோயில் தேவசம் போர்ட்டிலுள்ள முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர். மேலும் டிடிடி சார்பில் தற்போது கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. அத்துடன் திருப்பதி தேவசத்தின் எம்-புத்தகம் செயலி சிறப்பாக நிறுவப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.