Pradosham: சனிப்பிரதோஷத்தன்று சிவ பெருமனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து தீமைகளும் விலகும்.
பிரதோஷம்
சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்து முக்கிய இடம் பிடிப்பது பிரேதோஷம் தான். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். இந்நிலையில், இன்று சனி மகா பிரதோஷம். சனிப்பிரதோஷத்தில் விரதம் இருந்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும். சனிப்பிரதேஷத்தன்று சிவ ஆலயங்கள் சென்றால் 5 வருடங்கள் சிவ ஆலயங்கள் சென்ற பலனை பெற முடியும். இந்நாளில் சிவ ஆலயங்களில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுவதைப்போல நரசிம்மர் ஆலங்யங்களிலும் அபிஷக ஆராதனைகள் நடைபெறும். ஜூலை 15ஆம் தேதி (இன்று) மகா பிரதோஷத்துடன் சிவ ராத்திரியும் இணைந்து வருவதால் இந்த நாளில் நாம் செய்யும் காரிகள் நன்மைகளை அளித்த தரும்.
சனி பிரதோஷம்
சிவ பெருமானை வழிப்படுவதற்கு மிகவும் உகந்த காலம் பிரதோஷம். ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனிப்பலன் உண்டு. இவற்றில் சிவனுக்குரிய திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும், சனிக்கிழமைகயில் வரும் சனிப் பிரதோஷமும் அதீத விசேஷமானது. இந்நாளில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்கள் விலகி, புண்ணியம் சேரும். இன்று அருகில் உள் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
நரசிம்மர் வழிபாடு
பிரதோஷ நாளில் சிவபெருமானை வணங்குவது போல நரசிம்மரை வழிப்படுவது நமக்கு பெரும் நன்மைகளை தரும். இந்த பிரதோஷ காலத்தில் நாம் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் தயிர், தேன், பன்னீர், வில்வம், சந்தனம் வாங்கிக் கொடுக்கலாம். அதே போல பிரதோஷ நேரத்தில் நரசிம்மருக்கு பானகத்தை வைத்து வழிபடுவது சிறப்பானது.
பிரதோஷத்தன்று என்ன சாப்பிட வேண்டும்?
பிரதோஷ தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது. பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
சிவனுக்கு பிரியமான பொருட்கள்
பிரதோஷ நாளில், சிவனுக்கு பிரியமான வெள்ளை நிறத்தில் ஆன 6 பொருட்களை சிவனுக்கு அளிப்பது, சிவ பெருமானின் அருளை பரிபூரணமாக கிடைக்க செய்யும். கங்கை நீர், பால், பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், தயிர், திருநீறு, சங்கு ஆகியவற்றை படைத்து வழிபடுவது சிறப்பானது. மேலும், சந்தனம், வில்வம், பாயசம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். சனிப்பிரதோஷ நாளில் விரதமிருந்து, சிவ மந்திரம் ஜபித்து, சிவ சிந்தனையில் இருந்து, மாலையில் சிவன் கோயில்களில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்ய வேண்டும்.