உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் பஞ்ச பூதங்கள் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிக முக்கிய விழாவானது திருவூடல் திருவிழாவாகும். அதாவது உத்திராயண புண்ணியக்கால பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவூடலூக்கு ஒரு வரலாற்று கதை உண்டு திருவூடல் வீதியில் சமேத உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த திருவூடல் கணவன்-மனைவிக்கும் இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாக நடைபெற்றது.


 




இந்த நிகழ்வின் பின்னணியானது, பிருங்கி மகரிஷி முக்தி அடைவதற்கு அண்ணாமலையாரே நேரில் காட்சியளித்து முக்தி அளிக்க விரும்புவதால் தான் சென்று காட்சி அளிக்க போவதாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனிடம் கூறுகின்றார். இதற்கு அம்மன், முனிவர் தன்னை வணங்காமல் உங்களை மட்டுமே வணங்குகிறார். ஆகையால் நீங்கள் சென்று அவருக்கு காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று கூறுவதால் இருவருக்குமிடையே உடல் ஏற்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் தனியாக சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்க சென்றதால் கோபம்கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சன கோபுரம் வழியாக தனியே கோவிலுக்கு சென்றார். பின்னர் தன்னையே வணங்கி வந்த பிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் தனியாக சென்று காட்சியளித்து கிரிவலம் வருகிறார். இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.




 


அங்கிருந்து பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடைப்பெற்றும். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு , வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. திருவூடல் வீதியில் நடைபெறும் ஊடல் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான, நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர்.