திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீபூரணி புஷ்பகரணி காளியம்மன் திருக்கோவில். குழந்தை வரம் அருளும் இத்திருக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாள் அன்று அன்னதான அபிஷேக விழா விமர்சையாக நடைபெறும். அதன்படி சித்திரை திருநாளான நேற்று திருக்கோவில் நடை திறக்கப்பட்டு உற்சவர் மற்றும் மூலவர்களான ஸ்ரீ பூரணி புஷ்பகரணி காளியம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு கற்கள் பதித்த ஆபரணங்களோடு கையில் திரிசூலத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 


 




 


அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீயில் கருகுவதை உணர்த்தும் வகையில் திருக்கோவில் பூசாரி குணசேகரன் சாமிகள் 2 1/4 கிலோ எடையுள்ள கற்பூரத்தை கையில் ஏந்தி திருக்கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்த பின் மூலவருக்கும் உற்சவருக்கும் பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. குழந்தை வரம் வேண்டி காலை முதல் விரதம் இருந்து திருக்கோவிலுக்குள் வந்திருந்த தம்பதியினருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாக பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும். கோவிலின் பின்புறம் சிவனே மலையாக காட்சி தரும் மலையாக உள்ளது. மலையை சுற்றிலும் கிரிவலப் பாதை அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாள் அன்று சூரிய பகவான் அண்ணாமலையார் மீது பட்டு வழிபடுவது வழக்கம். இந்த அபூர்வமான நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர தரிசிப்பர்.


 




அதன்படி சித்திரை திருநாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு திருநேர் அண்ணாமலையாருக்கு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகள் நடைபெற்றுது. திருநேர் அண்ணாமலையாருக்கு பல்வேறு சிறப்பு வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சரியாக அதிகாலை 7 மணிக்கு தீப மலையின் உச்சியில் காட்சி கொடுத்த சூரிய பகவான் திருநேர் அண்ணாமலையார் மீது பட்டு, சூரிய பகவான் திருநேர் அண்ணாமலையாரை வழிபட்டார். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வினை நீண்ட நேரமாக ஆன்மீக பக்தர்கள் காத்திருந்து திருநேர் அண்ணாமலையாரையும், சூரிய பகவானையும் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு ஒரு சேர சாமி தரிசனம் செய்தனர்.