கார்த்திகை தீபம் 2025: கார்த்திகை தீபம் 2025: தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (டிசம்பர் 3ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தலமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா இன்று நடைபெறூகிறது. கார்த்திகை தீப விழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மலையின் உச்சியில் மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை செல்ல முடியாத பக்தர்கள் நேரலையில் தீபத்தை பார்த்து அண்ணாமலையாரின் அருளை பெறலாம்.
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
ராஜேஷ். எஸ் | 03 Dec 2025 06:00 PM (IST)
Tiruvannamalai Deepam 2025 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... கொட்டும் மழை(லை)யில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. பரவசத்தில் பக்தர்கள்

திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா நேரலை