திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழாவின் 5ம் நாள்; சுவாமிக்கும் அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை

சுவாமி மற்றும் அம்பாள் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி  சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில்  உலா வந்தனர்.  

Continues below advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணிதிருவிழாவின் 5-ம் திருநாளன்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணிதிருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான குடவருவாயில் தீபாராதனை மேலக் கோவிலில் வைத்து நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. குடவருவாயில் தீபாராதனையொட்டி  சுவாமியும் அம்பாளும் தனித்தனியே தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் பிரதான கதவு சாத்தப்பட்டது.


அதேநேரத்தில் எதிர்புரம் சுவாமி ஜெயந்திநாதர் கீழ ரதவீதி முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்ததும், எதிர் சேவைக்காக கதவு திறக்கப்பட்டது. பின்னர்  தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் ஜெயந்திநாதருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை  நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர். தொடார்ந்து சுவாமி மற்றும் அம்பாள் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி  சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில்  உலா வந்தனர்.  


7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 


8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார் காக்கும் கடவுளான விஷ்ணுவின் திருவண்ணக் கோலத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளிய திருக்காட்சியை தரிசனம் செய்தால், வேண்டும் வரமெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சை சாத்தியில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக, காக்கும் அரசனாக வலம் வருவதால் அந்தத் திருக்கோலத்தை தரிசனம் செய்வார்கள். 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola