ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் மலைக்கோயில் வெளியே உள்ள பிரகாரங்கள் அனைத்தும் பக்தர்களின் வரிசை நீண்டு காணப்பட்டது.
மலைக்கோயில் செல்ல வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் மலைக்கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அடிவாரம் கிரிவீதி, சன்னதி வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர். மேலும், மலைக்கோயிலில் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படும் சுவாமி படம் பொறிக்கப்பட்ட காலண்டர்களையும் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
நத்தம் அருகே மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா.
நத்தம் அருகே மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூரில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி கணபதி ஹோமம், கலச பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. அதையடுத்து ஐய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். பின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடியுடன் யாத்திரை கிளம்பினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்