தூத்துக்குடி தூய பனிமயமாதா திருவுருவ பவனி இன்று மாலை தூத்துக்குடி நகர வீதிகளில் நடைபெற உள்ளது.




தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய 442வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாதாவின் சப்பரபவனி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.




தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய 442 ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தூய பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்று வருகிறது.




திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்றிரவு இரவு தூய பனிமயமாதாவின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் மின் விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சப்பரத்தில் தூய பனிமயமாதா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாதா சப்பரபவனி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.




தூயபனிமய மாதா பேராலய  பெருவிழாவை முன்னிட்டு காலை ஏழு முப்பது மணிக்கு தூத்துக்குடி மதுரை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறும் பெருவிழா கூட்டுத் திருப்பதியில் 50க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனர். காலை 9 மணிக்கு மதுரை மாவட்ட முதன்மை குரு ரவிபாலன் மற்றும் காலை 10 மணிக்கு முன்னால் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலி நடைபெறுகிறது.




இன்று மாலை 5.00 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா நிறைவுயும் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது. இத்துடன் 11 நாள் தூய பனிமயமாதா பேராலய பெருவிழா நிறைவடையும். நாளை காலை 5 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காகவும் பெருவிழா நன்கொடையாளர்களுக்காகவும் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெறும். காலை 6.30 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மதுரை நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டார்வின் உதவி பங்கு தந்தை பாலன் அருட் சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர் பக்த சபையினர் இறைமக்கள் செய்துள்ளனர்.தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.