தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 442 வது ஆண்டு பெருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.




தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறும். இதில், முக்கிய நிகழ்வுகளை குறித்தும் ஆண்டுகளில் மட்டும் தங்க தேர் திருவிழா நடைபெறும்.


   கொடியேற்றம்


இந்த ஆண்டு தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 442வது ஆண்டு பெருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடிபவனி நடைபெறுகிறது. தொடர்ந்து 26 ஆம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு தூத்துக்குடி மதுரை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறும் திருப்பலி முடிந்ததும் காலை 8:30 மணியளவில் பெயராலே முன்புள்ள கொடி மரத்தில் அன்னையின் திரு உருவம் பதித்த கொடியினை ஸ்டீபன் ஏற்றி வைக்கிறார்.




ஜூலை 26 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை திருவிழா நாட்களில் தினமும் காலை மாலையில் ஜெபமாலை திருப்பலி, மறையுரை, இரவில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும் ஜூலை 28ஆம் தேதி அன்று காலை 7:30 மணிக்கு ஆயர் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கப்படும் மாலை ஆறும் 15 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறும் 


திருவுருவ பவனி


ஆகஸ்ட் 4 ஆம் தேதி பத்தாம் திருவிழாவில் மாலை 7 மணிக்கு ஆயிரத்தெளம்பில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறும் தொடர்ந்து இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும்.




ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்னையின் பெருவிழா அன்று காலை ஏழு முப்பது மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும் தொடர்ந்து 10 மணிக்கு முன்னாள் இமான் அம்ப்ரோஸ் தலைமையில் உபகாரிக்களுக்கான திருப்பலியும் நடைபெறும். மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மதுரை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறும். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான நகர வீதிகளில் தூயபனிமயமாதா அன்னையின் திருவுருவ பவனி இரவு 7 மணிக்கு நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை பேராலயத்தின் பங்குத்தந்தை டார்வின், உதவி பங்கு தந்தை பாலன், அருட்சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர் இறைமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.




   சிறப்பு ரயில்


தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனுவில் தூத்துக்குடி மாநகரில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் அவர்களின் வசதிக்காக சென்னை-தூத்துக்குடி இடையே ஆகஸ்ட் 2,3 தேதிகளிலும் தூத்துக்குடி-சென்னை இடையே ஆகஸ்ட் 4,5 தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு உள்ளனர்