குளித்தலை கும்பாபிஷேக விழா: பிளக்ஸ் பேனர் வைப்பதில் பிரச்சினை: இளைஞர்கள் தடியடி தாக்குதல்!

குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் கும்பாபிஷேகத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நேற்று  இரு சமூகத்தினர் இடையே, குச்சி கட்டைகளை கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் கும்பாபிஷேகத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நேற்று  இரு சமூகத்தினர் இடையே, குச்சி கட்டைகளை கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு. 

Continues below advertisement


 

கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில்  நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள்  பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் பிளக்ஸ் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் முடிவெடுத்து இனி மேல் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இன்று அந்த பகுதியில் மாற்று சமூகத்தினர் வந்த போது இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மாற்று சமூகத்தினர் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்டைகளுடன் தாக்கம் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சனை குறித்து காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தும் எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது எனக் கூறி பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலைடி எஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

 


இது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola