திருவண்ணாமலை (Tiruvannamalai News) : நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளிநாடு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் காணப்படுகிறது. மேலும் பொவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலின் உள்ளே கூட்டம் அலைமோதும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.




 


ஆனி பிரம்மோற்சவம் நினைவுநாள் என்பதால் அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுவாமி வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.




அய்யங்குளத்தில் தீர்த்தவாரி


அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமங்கல மந்திரங்கள் முழுங்க வேத வாத்தியங்களுடன் சூலத்திற்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றது. பிறகு சூளத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாள் அன்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யங்குளத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதால் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது குளத்தின் கரையில் பாத்திரத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு அதன் மூலம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண