மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.


தோழிகளை எழுப்பும் நிகழ்வு:


ஆறாவது பாடல் முதல் ஒவ்வொரு தோழிகளாக எழுப்புவது போன்ற பாடல்களை இயற்றியுள்ள ஆண்டாள், 7வது பாடல் மூலம், தோழியின் வீட்டைச் சுற்றி நிகழும் நிகழ்வை சுட்டி காட்டி தோழியை எழுப்புகிறார். இதையடுத்து, எட்டாவது பாடல் மூலம் வெளிப்புறத்தில் நிகழ்வும் சுட்டி காட்டி எழுப்புகிறார்.


எட்டாவது பாடல் விளக்கம்:


எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும் பெண்ணே, அதிகாலையில், சூரியன் உதிக்கும் போது வானமானது தீச்சுடர் போல சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்த சிவப்பு நிறமானது தற்போது விலகி, வெள்ளை நிறத்தில் வானம் காட்சி தர ஆரம்பித்துவிட்டது, இன்னும் எழவில்லையா என தூங்கி கொண்டிருக்கும் தோழியை, வாசலில் இருந்து பிற தோழிகள் எழுப்புகின்றனர்.


காலையில், எருமை மாடுகளும் புல் மேய சென்றுவிட்டது. அதாவது, எருமை மாடு, மெதுவாக செல்லும் என்பதால், இன்னும் எழாமல் இருக்கிறாயே, என  கிண்டலுடன் சுட்டி காட்டுறார்.


காலையில் நீராட போகிறேன்  என சொன்னவர்களையும் , காத்திருங்கள் என்று உனக்காக பிற பெண்களையும் நிறுத்தி வைத்துள்ளேன். உனக்காக காத்திருக்கிறோம்.


நான், ஏன் உன்னை எழுப்புகிறேன் தெரியுமா, கேசி என்ற அரக்கனை கொன்ற கண்ணனை பற்றி பாட வேண்டும். அவனை வணங்க சென்றால், கேட்டது மட்டுமன்றி கேட்காததையும் தருவார். ஆகையால், நீராடி விட்டு நோன்பை தொடங்க வேண்டும். விரைவாக எழுந்தருளுவாயாக என தோழியை எழுப்புவது போல ஆண்டாள் எட்டாவது பாடல் படைத்திருக்கிறார். 


இப்பாடல் மூலம், சூரியன் உதயத்திற்கு முன்னே எழுந்திருக்க வேண்டும் என்பதை குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார். 


திருப்பாவை எட்டாவது பாடல்:


கீழ்வானம்


கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு


  மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள' போவான்போ கின்றாரைப் போகாமல் பிள்ளைகளும்


காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய


  பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு


மாவாய் பிறந்தானை மல்லரை மாட்டிய


  தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்


ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.




ஆண்டாள்:


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்புடையவை: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்