மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து ஆறாவது பாடல் மூலம் கண்ணபிரானுடைய சிறப்புகளையும், அவனிடம் இருந்து என்ன தேவை என்பதையும் பாடலாக இப்பாடலில் ஆண்டாள் அமைத்திருக்கிறார்


திருப்பாவை இருபத்து ஆறாவது பாடல் விளக்கம்:


பக்தர்களிடம் மிகுந்த அன்பு உடையவனே, நீல வண்ணத்தில் அழகாக காட்சி தருபவரே


எங்கள் நோன்புக்கு தேவையான  பொருட்களை நீ தருவாயாக என ஆண்டாள் கேட்கிறாள்.


சிறப்புக்குரிய வலம்புரி சங்கை பரிசாக கொடு     


இறைவனை வாழ்த்தி பாடும் பெரியவர்களை கொடு


மங்கள தீபத்தை கொடு,முரசு மற்றும் கொடியை கொடுப்பாயாக


மேலும், உம்முடைய புகழை பறைசாற்றி பாடுவதற்காக பறை இசைக்கருவியை கொடு…


திருபத்து ஆறாவது பாடல்:


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
   சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
   ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்


ஆண்டாள்:


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்ந்து படிக்க: Thiruppavai 25: மார்கழி 25...கவலைகள் தீர கண்ணனிடம் அருளை கேட்கும் ஆண்டாள்..


தொடர்ந்து படிக்க: Thiruppavai 24: மார்கழி 24... ” மலையை குடையாக வைத்து தூங்கியவனே... அருள் புரிவாயாக”- ஆண்டாள்..