மார்கழி மாதத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். பத்தொன்பதாவது பாடல் மூலம் கூற வருவதை காண்போம்.


திருப்பாவை பத்தொன்பதாவது பாடல் விளக்கம்:


குத்து விளக்கு எரிய, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல், பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தையில் தூங்கி கொண்டிருப்பவளே, 


நல்ல அருமையான வாசனையுடைய மலர்களைச் கொத்தாக சூடி கொண்டுள்ள பெண்ணே…


கண்களில், அழகாக மையிட்டு கொண்டிருக்க கூடிய பெண்ணே...


அத்தகைய அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே, உனது கணவரை எழுப்புவாயாக..


என்னாள், கணவனை பிரிய முடியாது என்று சொல்லாமல் , கண்ணனை எழுப்புவாயாக, சிறிது நேரமாவது அவரை பார்த்து வணங்கி, அருள் பெற வேண்டும் என ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார்.


திருப்பாவை பத்தொன்பதாவது பாடல்:


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்


   மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி


கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்


   வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்


மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை


   எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்


எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்


   தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள்:




கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்ந்து படிக்க: Thiruppavai 18: மார்கழி 18: இன்றைக்கான ஆண்டாளின் திருப்பாவை பாடல் இதுதான்!....


தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்…