திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

திருப்போரூர் கந்தசாமி முருகர் கோயில் - Kandhasamy Temple Thiruporur

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மகா கந்த சஷ்டி வைபவம், இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆதாரணை நடைபெற்றது. இதில் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.

கந்த சஷ்டி விழா - Kandha Sasti

கந்த சஷ்டி லட்சாணை பெரு விழா முன்னிட்டு, தினசரி காலை, மாலை நேரங்களில் (கந்தசுவாமி) முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையாருடன் எழுந்தருளி தெரு வீதி உலா நடைபெற உள்ளது.

Continues below advertisement

தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் மாலை நேரங்களில் சூர பக்தன் என்னும் அசுரன் யானை முகம் சிங்கமுகம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் பொம்மைகள் செய்யப்பட்டு முருகப்பெருமானுடன நான்கு மாத வீதிகளில் வலம் வருவார்.

கந்த சஷ்டி லட்சாசனப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான இறுதி நாள் சூரம்சம்ஹார விழா வரும் 27 தேதி நடைபெறுகிறது. 28ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகள் கோவில் செயல் அலுவலர் குமரவேல் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோவில் ராஜ கோபுரம், வட்ட மண்டபம், சுற்றுச்சுவர், சரவணபொய்கை குளம், நீராழி மண்டபம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகள் ஜொலித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு உற்சவங்கள் என்ன ?

22-10-2025 - மாலை ஏழு முப்பது மணி அளவில் கிளி வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் 

23-10-2025 - காலை பல்லாக்கு உற்சவம். மாலையில் ஆட்டு கிடா வாகனத்தில் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

24-10-2025 - காலையில் பல்லாக்கு உற்சவம், மாலையில் புருஷ மிருக வாகனத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமாள் காட்சியளிக்கிறார். 

25-10-2025 - பல்லாக்கு உற்சவம், மாலையில் பூத வாகனத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமாள் காட்சியளிக்கிறார். 

26-10-2025 - காலையில் பல்லாக்கு உற்சவம், மாலை வேளையில் வெள்ளி அன்ன வாகனத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

27-10-2025 - காலையில் பல்லாக்கு உற்சவம், சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு நேரத்தில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

28-10-2025 - மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் யானை வாகனத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.