சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்போரூர் முருகன் தேர் உற்சவம் ஆதிதிராவிடர் பகுதிக்கு சென்றது. அப்பகுதி மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து முருகப்பெருமானுக்கு பூக்கள் தூவி தேங்காய் உடைத்து மேல தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாசி பிரம்மோற்சவ பெருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோயில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுவாமி சூரசம்ஹாரம்
இதில் முக்கிய நிகழ்வான 8 ஆம் நாள் நேற்று பரிவேட்டைத் திருவிழா துவங்கி கோயிலிலிருந்து புறப்படும் முத்துக்குமார சுவாமி ஆலத்தூர் கிராமத்துக்குச் சென்று அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்து பரிவெட்டை முடிந்து. முத்துக்குமார சுவாமி சூரசம்ஹாரம் நிகழ்ந்து. பின்னர் தண்டலம், மேட்டுதண்டலம், உள்ளிட்ட பகுதிகளில் முருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி மயில் வாகனத்துல ஒரு காலை தரை மீதும் மற்றொரு காலை மயில் மேலேயும் வைத்துக்கொண்டு, கைல வில் அம்பு ஏந்தி போர்க்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக
இந்நிலையில் திருப்போரூர் படவேட்டம்மன் கோவில் தெரு பகுதிக்கு முத்துக்குமார சுவாமி தேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செல்லாத இருந்து வந்த நிலையில், திருப்போரூர் பகுதி 15 ஆவது வார்டு கவுன்சிலர் பாரதி சமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்டம் நிர்வாகத்திற்கு மற்ற பகுதிகளுக்கு தேர் செல்வது போல் அப்பகுதிக்கும் செல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
உற்சாகமாக வரவேற்று..
இதனால் திருப்போரூர் படவட்டம்மன் கோவில் தெரு பகுதிக்கு மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்துக்குமாரசாமி திருத்தேர் உற்சவம் வீதி உலா நடைபெற்றது. இதனை அப்பதி மக்கள் உற்சாகமாக வரவேற்று மேளம், தாங்கலங்கள் முழங்க பட்டாசு வெடித்து பூக்களால் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை செய்து தீபா ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதி பழங்குடி மக்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு முருகப்பெருமானை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்