மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் புற்று ரூபமாக மூலவராக விற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த நந்தனார், சிதம்பரம் நடராஜர் பெருமானை தரிசிக்க செல்லும் போது திருப்புன்கூர் தளத்திற்கு வந்தடைந்தார். அப்பொழுது, அவர் சிவபெருமானை தரிசிக்க சென்ற போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.




இதனால் கோயிலின் வாசலிலேயே நின்று சிவபெருமானை தரிசிக்க முயன்றார். ஆனால், கருவறை முன்பு இருந்த நந்தி பகவானை தாண்டி சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை. தன்னால் இறைவனை காண முடியவில்லையே என மனதார சிவபெருமானை வேண்டி நந்தனார் பாடியுள்ளார். அப்போது தனது பக்தனின் வேதனையை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை சற்று விலகி இருக்குமாறு பணித்தார். அதன்படி நந்தி பகவான் கருவறை முன்பு நேராக இல்லாமல் இடதுபுறமாக சற்று விலகினார்.


International Women's Day : சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? வரலாறு என்ன? இந்த ஆண்டின் தீம் இதுதான்!




அப்போது வாசலில் இருந்தே இறைவனை நந்தனார் மனமுருகி வேண்டியதாக கோயில் வரலாறு தெரிவிக்கின்றது. இன்றளவும் கோயிலின் ராஜ கோபுரத்திற்கு  வெளியே நின்றே மூலவரை தரிசிக்கும் வண்ணம் நந்தி பகவான் விலகியே இருப்பார். இவ்வளவு சிறப்புமிக்க இக்கோயிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு  பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, விபூதி, தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


North Indians Safety: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி.. உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொன்ன பீகார் குழு..!




அதனை தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல், வில்வ இலை, பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு நந்திபகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவலோகநாத சுவாமியையும் வழிபாடு செய்தனர்.


420 மலையாக இருக்கும் நபரால் தமிழ்நாட்டிற்கே கேடு.." தமிழக பா.ஜ.க. தலைமை மீது நிர்மல்குமார் சரமாரி குற்றச்சாட்டு..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண