மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.


மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பழமையான பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் திருக்கோயில். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் இது ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமும் ஆகும். 




இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 9-ம்  திருநாளின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. 


MediaOne: 'தேசப் பாதுகாப்பு என்று உரிமைகளை மறுப்பதா?'- மீடியா ஒன் சேனல் மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி




இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நகராட்சி தலைவர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, பரிமள ரெங்கா என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் மேற்கொண்டனர். தேர் நான்கு வீதிகளைச் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.


Pathu Thala Box Office Collection: மாநாடு, வெந்து தணிந்தது காடு வரிசையில் சிம்புவுக்கு வெற்றியா... பத்து தல வசூல் நிலவரம்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண