திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தெப்ப திருவிழா மார்ச் 2 ஆம் தேதி துவக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பதிருவிழா வரும் 23ம்தேதி தொடங்குகிறது. 26ம் தேதி கருட சேவையும், மார்ச் 2ம் தேதி தெப்பம் மிதவை உற்சவமும் நடக்கிறது.

Continues below advertisement
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலில் தான் திருவில்லிபபுத்தூரில் பிறந்து “கோதை” என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான “ஆண்டாள்” அரங்கனுள் ஐக்கியமானாள். இத்தகைய புகழ்பெற்ற கோவில் ஆகும். குறிப்பாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு மாசி தெப்பதிருவிழா வரும் 23ம்தேதி தொடங்குகிறது. 26ம்தேதி கருட சேவையும், மார்ச் 2ம் தேதி தெப்பம் மிதவை உற்சவமும் நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பதிருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 23ம் தேதி மாசி தெப்பத் திருவிழா தொடங்குகிறது.
 

 
முன்னதாக விழாவிற்கான திருப்பள்ளியோடம் ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்தக்கால்) நிகழ்ச்சி வரும் 22ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.மாசி தெப்பத்திருவிழா மார்ச் 3ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் மார்ச் 2ம் தேதி நடக்கிறது. தெப்ப திருவிழாவின் முதல் நாளான 23ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரங்க விலாச மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேருகிறார். அதன்பின் ரங்கவிலாச மண்டபத்தில் இருந்தவாறு நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். திரளான பக்தர்கள் தெப்பத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள கோயில் தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கி நடந்து வரும் நிலையில், தெப்பம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola