சின்னாளபட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடந்த 31.05.24ம் தேதி வெள்ளிக்கிழமை கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 01.06.24 தேதி இரண்டாம் கால பூஜையும், அம்மனுக்கு கனி, மூலிகை பிரசாதம் வழங்கப்பட்டது.

Continues below advertisement

சின்னாளபட்டி அருகே கலிக்கம்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னாளப்பட்டி அருகே கலிக்கம்பட்டியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று  நடைபெற்றது. கடந்த 31.05.24ம் தேதி வெள்ளிக்கிழமை கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று 01.06.24 இரண்டாம் கால பூஜையும், அம்மனுக்கு கனி, மூலிகை பிரசாதம் வழங்கப்பட்டது.

Assembly Election Results 2024 LIVE: விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை! அருணாச்சல், சிக்கிமில் தற்போதைய நிலவரம் என்ன?


பின்னர் 02.06.24 ஞாயிறுக்கிழமை இரண்டாம் கால பூஜையான விநாயகர் பூஜை, ஸ்ரீ காளியம்மனுக்கு, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் ஆகியோருக்கு பூஜை நடைபெற்ற பின் வேதபாராயணம் முழங்க சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை கோவிலை சுற்றி கடம் புறப்பாடு ஆகி எடுத்து வந்து சுற்றிவந்து கோபுர கலசத்தின் மேல் புனித  தீர்த்தத்தை ஊற்றினர். அப்பொழுது  வானத்தில் கருடன் பறந்ததை பார்த்து மக்கள் ஓம் சக்தி... பராசக்தி... என விண் அதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்த புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

WB Exit Poll Results 2024: மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மாஸ் காட்டிய மோடி! கருத்துக்கணிப்பு நிலவரம்

நோட்டா கட்சியா? தமிழகத்தில் பாஜக நுழைய முடியாதா? - கருத்துக்கணிப்பால் காலர் தூக்கிவிடும் அண்ணாமலை

பின்னர் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் ஆகிய  தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு கலிக்கம்பட்டி, சின்னாளப்பட்டி, வெள்ளோடு, பஞ்சம்பட்டி, முன்னிலைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கலிக்கம்பட்டியில் உள்ள இஸ்லாமியர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஊர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola