தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள  அனுமந்தன்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித தூய ஆவியானவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் புனித சவேரியாரின் சப்பரப்பவனி திருவிழாவினை நடத்துவது வழக்கம். இந்த வருடம் 146 வது ஆண்டு சப்பரப்பவனி திருவிழாவினை கடந்த வாரம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கினார்கள்.


TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?




திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சவேரியாரின் திரு உருவ சப்பரப்பவனி விழாவில் அருட் தந்தை பிரான்சிஸ் சேவியர் மற்றும் சிறப்பு அருள் தந்தையர்கள் ஞானப்பிரகாசம் கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து புனித சவேரியார் திரு உருவச் சிலை மற்றும் காவல் சம்மனசு மாதா  திரு உருவச் சிலைகளை அருள் தந்தையார் அவர்கள் மந்திரித்து தீர்த்தம் தெளித்து ஜெபங்கள் பாடி அருளாசி வழங்கி மந்திரித்த திருவுருவ சிலைகளை சப்பரபள்ளக்கில் வைத்து நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் சென்று சப்பரப்பவனி ஊர்வலத்தினை நடத்தினார்கள்.


PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?




இந்த ஊர்வலத்தினை சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் இறைவழிபாடு நடத்தும் விதமாக உப்பு, மெழுகுவர்த்தி பட்டு துணிகள் காணிக்கை மலர்கள் மற்றும் மலர் மாலை அணிவித்து இறை வழிபாடுகளை நடத்தினார்கள். மேலும் குழந்தைகளை சவேரியாரின் திருஉருவச் சிலை காலடியில் வைத்து சிறப்பு ஆசீர்வாதங்களை செய்தனர். விழாவில் நகரின் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து பெருந்திரளாக கலந்து கொண்டு இறை வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். விழாவின் நிறைவாக சப்பரபவனி ஆனது ஊர் முழுவதும் சுற்றி வந்து புனித தூய ஆவியானவர் ஆலயத்தில் அருள் தந்தையர்கள் ஜெபம் வாசித்து இறக்கி வைத்தனர். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.