உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் தினசரி பல்வேறு சேவைகள் நடைபெறும். காலை சுப்பிரபாத சேவை, தோமல சேவை, கல்யாண உற்சவம், தீப அலங்கார சேவை என நடைபெறும். மேலும் இலவச தரிசனமும் நடைபெரும். அந்த வகையில் மார்கழி மாதம் என்றாலே பெருமாளுக்கு விஷேசம் தான். பெருமாள் கோய்கிளில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலகலமாக நடைபெற உள்ளது. டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை இந்த வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.
அதேபோல் அடுத்த மாதம் வரக்கூடிய விஷேச நாட்கள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 3 ஆம் தேதி பார்வேத மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம், 8 ஆம் தேதி சர்வ ஏகாதசி, 12 ஆம் தேதி ஆட்சியாய நொச்சவளு ஆரம்பம், 17 ஆம் தேதி தனுர் மாதம் தொடக்கம். டிசம்பர் 22 ஆம் தேதி எழுமலையான் சன்னதியில் சின்ன சாத்தும் முறை நடைபெறுகிறது. 23 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தொடங்குகிறது. அதேபோல் 24 ஆம் தேதி வைகுண்ட துவாதசி அன்று எழுமலையான் சக்ர ஸ்நாணம். 28 ஆம் தேதி பிரணயகலஹ உற்சவம் நடைபெறும் என்று தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
குறிப்பாக வைகுண்ட ஏகாதசியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசன்ம் செய்ய வருவார்கள். மேலும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க வாசல் திறக்கப்படும். இதற்கான சொர்க்க வாசல் தரிசன ஏற்பாட்டையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
அதேபோல, சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசனம் செய்ய ஏதுவாக, டிசம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில 9 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆதாரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.