மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உலகப் புகழ் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில்  அபிராமி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை இன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.




மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா ஐ.எப்.எஸ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகனிடம் கேட்டறிந்தனர். அப்போது, கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.




பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 250 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம்.


வீரவெண்மணி வரலாறும், கம்யூனிஸ்ட்களின் தியாகமும்  போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில், மயிலாடுதுறையில் செயல்படுத்தப்படாமல் உள்ள பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த டிசம்பர் 17 -ஆம் தேதி முதல் வருகின்ற 23 -ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 




Share Market: இன்று காலை ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை...லாபத்தில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி பங்குகள்...


கொள்ளிடத்தில் துவங்கிய நடைபயணம் மூன்றாம் நாளாக நேற்று ஆனந்த தாண்டவபுரத்தில் துவங்கி மயிலாடுதுறை வந்தடைந்தனர்.   பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் முயற்சிகளை தடை செய்ய வேண்டும், மணல் குவாரிகளை தடுத்துநிறுத்த வேண்டும், விளைநிலங்களில் எரிவாயு குழாய்களை பதிப்பதை தவிர்க்க வேண்டும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை அதிநவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், மருத்துவ கல்லூரியை கொண்டுவர வேண்டும், மாவட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை கொண்டு பேப்பர், அட்டை தயாரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. 





மேலும், பல்வேறு கிராமங்களை கடந்து மயிலாடுதுறை நகர்புறங்களில் தங்கள் கோரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி  சென்றனர். தொடர்ந்து இரவு மாப்படுகை கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


மாங்காடு: தரக்குறைவாக பேசி சமூகவலைதளங்களில் பதிவிட்ட அரசு ஆசிரியை...! பள்ளி மேலாண்மை குழு தலைவி தற்கொலை