திருவண்ணாமலை : பாஜக விவகாரத்தில் வரலாற்றில் பெரும் பிழை செய்தது முதலமைச்சர்கள் கருணாநிதியும்,எடப்பாடியும் தான், அமைச்சர் கடம்பூர் ராஜுதான் தற்போது வரலாற்று பிழை செய்துள்ளதாக திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி.
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திப்பில் , பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்க வேண்டும் என்று அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கொடுக்கவில்லை என்றும் அவர் நீண்ட காலம் அரசியல் இருக்கக்கூடியவர் என்றும் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் எனவும் அவருக்கு தன்மானம் உள்ளதாகவும் இதன் காரணமாகத்தான் அவர் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என தெரிவித்தவர். தேமுதிக தலைவர் பிரேமதா விஜயகாந்த் முதலமைச்சர் சந்தித்தது நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது என்றும் அதிமுக கூட்டணியில் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை மாநிலங்கள் அவை சீட்டு ஒதுக்கவில்லை எனவும் இதன் அடிப்படையில் அவர்கள் திமுக கூட்டணிக்கு செல்லலாம் என தனது கருத்தை தெரிவித்தார்.
செஞ்சி கோட்டை தங்களது பாட்டனார் கோட்டை என்றும் பாஜக அரசு யாரைக் கேட்டு இது மராட்டிய மன்னர்கள் கோட்டை என கூறியது என கேள்வி எழுப்பியவர் முன்னூறு ஆண்டு காலம் ஆனந்த கோன் கிருஷ்ண கோன் போன்றவர் ஆட்சி செய்துள்ளதாகவும், யாதவர்கள் ஆட்சி செய்தது கல்வெட்டில் இருப்பதாகவும் ஆனால் இவர்கள் திடீரென என தொடர்ந்து மராட்டியர்களும் ஆட்சி செய்து உள்ளதாகவும் ஆனால் பாஜக அரசு இது திடீரென மராட்டிய மன்னர்கள் கோட்டை என தெரிவித்தது, ஆனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜேந்திர சோழன் தற்போது தான் இறந்துள்ளாரா என கேள்விப்பவர் அவருக்கு நாணயங்கள் வெளியிட்டுள்ளீர்கள் அதில் ஆங்கிலம் இருப்பதாகவும் ஹிந்தி இருப்பதாகவும் தமிழ் எங்கே என கேள்வி எழுப்பினார் அவர் தமிழனுக்கு காசு வெளியிடும் போது தமிழ் மொழியை இல்லை என குறிப்பிட்டார்.
சிலை எப்போது வைப்பீர்கள் என கேள்வி எழுப்பியவர் எனது பாட்டனாருக்கு சிலை வைத்தால் இறந்து போவார்கள் என அனைவருக்கும் தெரியும் என கூறினார். தஞ்சை பெருவுடையார் கோவிலில் தலை வாசல் வழியாக யாரையாவது சென்று வர முடியுமா என கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியை ஜெயலலிதா கலைத்தது வரலாற்றில் ஒரு முக்கிய முடிவு என்றும் பாஜக ஆட்சி கலைத்த பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வரலாற்று பிழையை செய்து விட்டேன் என கூறினார் அவர் இறக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும் ஆனால் கலைஞர் பாஜக கூட்டணி தூக்கிப்பிடித்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து வரலாற்றில் பெரும் பிழை என குறிப்பிட்டார்.
தற்போது அதிமுக எடப்பாடி எடுத்துள்ள முடிவு வரலாற்று பெரும் பிழை. தமிழ்நாட்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு என்ன வரப்போகிறது என கேள்வி எழுப்பியவர் கடம்பூர் ராஜு கூறியது தான் வரலாற்றில் பிழை என தெரிவித்தார். திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாகும் என குறிப்பிட்டவர். என்னை முதலமைச்சராக ஆக்கினால் நிலை மாறும் என்றும் அண்ணாமலையார் மாறி அருணாச்சலம் பின்னர் அருணா சலம் எனவும் மாறலாம் என குறிப்பிட்டார்.
திருவண்ணாமலையில் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலும் ஏன் தெலுங்கு வார்த்தை என கேள்வி எழுப்பினார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களிடம் தான் நாம் தமிழர் கட்சி கூட்டணி என குறிப்பிட்டார். வரலாற்று பெரும் பிழை செய்தது கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா பாஜக ஆட்சியை கலைத்துவிட்டு வரலாற்று பிழை செய்து விட்டேன் என கூறி தான் உயிர் உள்ளவரை பிஜேபியுடன் கூட்டணி வைக்கவில்லை
எடப்பாடி அரசு தான் தற்போது வரலாற்று பெரும் பிழை செய்து விட்டதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி கூறுவது தான் வரலாற்று பெரும் பிழை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த மூத்த தலைவர் ஓபிஎஸ் இரண்டு முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார். அவருக்கு உரிய மரியாதை அளிக்காமல் பிரதமர் நேரம் ஒதுக்காமல் இருந்ததால் தற்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறார்.
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சரை சந்தித்தது ஏற்கனவே பல நாட்களாக திட்டமிடப்பட்டது. திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக இருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலில் எந்த அரசியல்வாதியும் தலைவாசல் வழியாக சென்று வரட்டும் என்றும் குறிப்பிட்டார்