காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் பகுதியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜம் பெருமாள் திருக்கோவில் உள்ள கஜேந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் மாசடைந்து காணப்பட்டு வந்த நிலையில், ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் கஜேந்திர மோட்சம் பெருவிழா குளத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
கஜேந்திர மோட்சம் உற்சவம்
இந்த குளத்தை முழுமையாக சீரமைத்து புறனமைப்பு பணி நிறைவு பெற்று தயாராகி இருந்த நிலையில், 50 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு ஆடி மாத பெருவிழா கஜேந்திர மோட்ச உற்சவம் நடைபெற்றது. கஜேந்திர மோட்சம் உற்சவத்தை ஒட்டி அஷ்டபுஜ பெருமாள் பல்வேறு மலர்களால் அலங்கரித்து திருஆபரணங்கள் அணிந்து, கருடசேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு குவிந்த பக்தர்கள்
கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாதித்த நிலையில், ஸ்தல வரலாறு ஆன இத்திருக்கோவிலில் உள்ள கஜேந்திர புஷ்கரணி என்னும் திருக்குளத்தில், அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளி குளத்தை வளம் வந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருக்கோவிலில் நடைபெற்ற கஜேந்திர மோட்சம் உற்சவத்தை ஏராளமான குளத்தின் கரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து ஸ்ரீ கஜேந்திர வரதனை வணங்கி அருள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் S.K.P.S.சந்தோஷ் குமார், செயல் அலுவலர் சா.சி . ராசமாணிக்கம், அறங்காவலர்கள் M.இளங்கோவன் J.தேவிகா உள்ளிட்ட உடன் இருந்தனர்.
அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோவில்
கோயில் நகரமாக போற்றக்கூடிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்த போது இருந்து வருகிறது. இந்த கோயில் 44 வது திவ்ய தேசமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேச தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் எட்டு கரங்களுடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.
ஒருமுறை சரஸ்வதி தேவிக்கு, லட்சுமி தேவி பெரியவரா, தான் பெரியவரா என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி பிரம்மாவின் மனைவி சரஸ் தனது கணவர் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கு பிரம்மா லட்சுமி உயர்ந்தவர் என தெரிவித்ததால் பிரம்மாவின் மனைவி கோபம் அடைகிறாள். இதனைத் தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் சரஸ்வதி முறையிட்டபோது, அவர்களும் லட்சுமி பெரியவள் என கூறியதால் ஆத்திரமடைந்து சரஸ்வதி பிரம்மாவை பிரிந்து செல்கிறார்.
இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் பிரம்மா அஸ்வமேத யாகம் செய்துள்ளார். அஸ்வமேத யாகம் செய்யும்போது எப்போதும் மனைவியுடன் செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்த போது அதை மீறி, பிரம்மா செயல்பட்டதால் மீண்டும் கடும் கோபம் அடைந்த சரஸ்வதி யாகத்தை தடுக்க பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டார். அதன்படி வேகவதி நதியாக வந்து தியாகத்தை தடுக்க முயற்சி செய்தபோது பெருமாள் அதிலிருந்து யாகத்தை காத்தருளினார். தொடர்ந்து யாகத்தை கெடுக்க பூதத்தை சரஸ்வதி ஏறிவிட்டார். கூட்டத்தை அழிப்பதற்காக திருமால் 8 கரங்களுடன் அவதாரம் எடுத்து பூதத்தை அளித்தார், என்பது இந்த கோயிலில் தல வரலாறாக உள்ளது.