திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் திணறியது. 





முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயிலில் அதிகாலை 1:00 நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.  பகல் 10:30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 






பகலில் உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வடக்குத் வீதியில் தைப்பூச மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்து. இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலை சேர்ந்தார்.




தைப்பூசத் திருவிழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரை குழுக்களாகவும் கார் வேன் பஸ்களிலும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பச்சை நிற  ஆடையணிந்து திருச்செந்தூரில் குவிந்தனர். இந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும் நாழிகிணற்றில் புனித நீராடினர். பின்னர் நீண்ட  வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தியும் காவடி எடுத்தும். நீண்ட வேல்களால் அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் திருச்செந்தூரில் மக்கள் வெள்ளத்தில் திணறியது. பாதயாத்திரை பக்தர்களுடன் வந்த வாகனங்கள் ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் மட்டும் கோயில் வளாகம் வரை இயக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் நகரின் வீதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தைப்பூசத் திருவிழா விற்கு வரலாறு காணாத வகையில் பக்தர்கள் திரண்டதால் நகரமே ஸ்தம்பித்து.




தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பி எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருருந்தனர்.