Thaipusam: 'தமிழ் கடவுள் இல்ல.. தரணிக்கே கடவுள்' இத்தனை நாடுகளிலா முருகன் கோயில்! களைகட்டும் தைப்பூசம்

Thaipusam 2025: தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா தவிர மற்ற எந்தெந்த நாடுகளில் முருகன் கோயில் உள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

தமிழ்கடவுள் என்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு போற்றி வணங்கப்படும் கடவுள் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக தைப்பூசம் திகழ்கிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. 

Continues below advertisement

கடந்த 5ம் தேதியே தைப்பூசத் திருவிழா காெடியேற்றப்பட்டு தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முருகப்பெருமான் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஆயிரக்கணக்கான முருகன் கோயில்கள் இருப்பது நாம் அறிந்தது. இந்த நிலையில், இந்தியா கடந்தும் எந்தெந்த நாடுகளில் முருகன் கோயில்கள் இருக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம். 


அமெரிக்கா:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று அமெரிக்காவும் ஆகும். அமெரிக்காவின் வாஷிங்டன், மேரிலேண்ட், கலிஃபோர்னியா, நியூயார்க், ரிச்வில்லே, அரிசோனா ஆகிய மாகாணங்களில் முருகன் கோயில்கள் உள்ளது. 

வாஷிங்டன்    - ஸ்ரீ முருகன் கோயில்
மேரிலேண்ட்    - சிவ முருகன் கோயில்
                             - பழனிசுவாமி சிவன் கோயில்
                               - ஸ்ரீசிவவிஷ்ணு கோயில்

கலிஃபோர்னியா - சிவன் கோயில்
                                   - பழனிசாமி கோயில்
                                   - சிவ விஷ்ணு கோயில்
நியூ யார்க்              - யோக முருக கதிர்காம கோயில்

அரிசோனா            - பழனியாண்டவர் கோயில்


கனடா:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் கனடா மிக மிக முக்கியமானது ஆகும். இந்திய தமிழர்கள் மட்டுமின்றி இலங்கைத் தமிழர்களும் அதிகளவு வசிக்கின்றனர். 

ஒன்டாரியோ   -  கனடா கந்தசாமி கோயில்
                             - சிவன் கோயில் 

க்யூபெக்             - சுப்ரமணிய ஐயப்ப கோயில்
                              
மாண்ட்ரியல்    - மாண்ட்ரியல் திருமுருகன் கோயில் 
                               - க்யூபெக் சைவ மகா சபை
                               - அருள்மிகு திருமுருகன் கோயில் 

ஆஸ்திரேலியா:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி, பெர்த், மெல்போர்ன், கான்பெர்ரா, நியூ சவுத்வேல்ஸ் பகுதிகளில் உள்ளது. 

சிட்னி  - முருகன் கோயில்

பெர்த் - ஸ்ரீபாலமுருகன் கோயில்
             - ஸ்ரீசிவன் கோயில்

மெல்போர்ன் - மெல்போர்ன் முருகன் கோயில்
                           - சிவ விஷ்ணு கோயில்

கான்பெர்ரா  - முருகன் கோயில் 
                           - விஷ்ணு சிவன் கோயில்

நியூ சவுத் வேல்ஸ்  - ஸ்ரீசிவன் கோயில்


இங்கிலாந்து:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இங்கிலாந்து தவிர்க்க முடியாத நாடாகும். 

லண்டன்  - ஸ்ரீமுருகன் கோயில்
                    - சிவன் கோயில்

வடக்கு இங்கிலாந்து - ஸ்ரீ முருகன் கோயில்
                                          - ஸ்ரீ கணபதி கோயில்

லண்டன் ஹைகேட்ஹில் - முருகன் கோயில்


சுவிட்சர்லாந்து:

உலகின் அழகான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சுவிட்சர்லாந்தில் அதிக முருகன் கோயில்கள் உள்ளது.

பெர்ன் - பெர்ன் முருகன் கோயில்

ஆறு - ஆறு முருகன் கோயில்

ஜுரிச் - ஜுரிச் சிவசுப்ரமணிய கோயில்

லாசென்னே - லாசென்னே சுப்ரமணிய கோயில்

தென் ஆப்பிரிக்கா :

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் முருகன் கோயில்கள் உள்ளது. 

டர்பன் - ஸ்ரீ சிவ சுப்ரமணியம் கோயில்
              -  ஸ்ரீ முருகன் கோயில்
              

வியட்நாம் :

வியட்நாம் நாட்டில் சுப்ரமணியம் கோயில் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் உள்ளது. 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அருள்மிகு முருகன் கோயில், ஸ்ரீசிவன் கோயில், ஸ்ரீபாலசுப்ரமணியன் கோயில், ஸ்ரீ முருகன் மலை கோயில், வேல்முருகன் கோயில், அரசகேசரி சிவன் கோயில், ஸ்ரீசிவன் கோயில் உள்ளது. 

இலங்கை:

தமிழர்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள நாடு இலங்கை ஆகும். இங்கு ஏராளமான முருகன் கோயில்கள் உள்ளது. 

ஜாஃப்னாவில் நல்லூர் கந்தசாமி கோயில், திருக்கோணீஸ்வரம் கோயில் உள்ளது. ஓகண்டாவில் உகந்தை மலை முருகன் கோயில், வேலாயுத சாமி கோயில், ஸ்ரீ செல்வசன்னிதி முருகன் கோயில் உள்ளது. கண்டியில் புகழ்பெற்ற கண்டி கதிர்காமம் கோயில் உள்ளது.

மண்டூரில் மண்டூர் கந்தசாமி கோயில், தில்லை மந்தூர் கோயில் உள்ளது. சித்தண்டியில் சித்தண்டி முருகன் கோயில், வேருகாலில் சித்ரா வேலாயுத சுவாமி கோயில், தண்டமலை முருகன் கோயில், திருக்கோயில் சித்ரா கோயில், வேலாயுத சுவாமி கோயில், பட்டிகோலா திருச்செந்தூர் கோயில், முருகன் கோயில், ஊரணி குமரத்தான் கோயில் ஆகும். 

ஃபிஜி:

ஃபிஜி நாட்டில் உள்ள நாதி நகரில் ஸ்ரீசிவ சுப்ரமணிய கோயில் அமைந்துள்ளது. 

மொரிசியஸ்:

மொரிசியஸ் நாட்டில் உள்ள லூயிஸ் துறைமுக நகரில் சொக்கலிங்கம் மீனாட்சியம்மன் கோயில், கிளெமென்சியாவில் தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. 

சிசிலீஸ்:

கிழக்கு ஆப்பிரக்காவில் அமைந்துள்ளது சிசிலீஸ் நாடு. இங்கு அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயில் உள்ளது. 

மலேசியா:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. மலேசியாவில் ஏராளமான முருகன் கோயில்கள் உள்ளது. 

பகாங்க்   - ஸ்ரீமாறன் மார்த்தாண்டவர் கோயில்

செலாங்கோர் - மகாமாரியம்மன் கோயில்

பினாங்கு  - அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில்

பெராக் - ஸ்ரீ சுப்ரமணியர் கோயில்

சீனா:

உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவில் முருகன் கோயில் உள்ளது. பூதிசஸ்த்வ ஸ்கந்த கோயில் என்ற பெயரில் முருகன் கோயில் உள்ளது. 

மேலே கூறிய நாடுகளில் உள்ள முருகன் கோயிலும் நாளை மறுநாள் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola