மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற நூற்றாண்டுகள் பழமை ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கொற்கை வடபத்திர காளியம்மன்
மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் மேலே வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்து உடனே நிறைவேற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமான ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து தங்கள் வேண்டுதல்களை வைத்தும், வேண்டுதல் நிறைவேறிய நபர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவெற்ற திரளுவார்கள்.
இதையும் படிங்க: Egg Benefits: மரணத்தைக் கூட தள்ளிப்போடும் முட்டை..! இதய ஆரோக்கியத்தின் கார்டியன், இவ்வளவு நன்மைகளா?
திருப்பணி வேலைகள்
இந்நிலையில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்த கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் கோயில் திருப்பணிகளை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து கோயில் கட்டடங்கள் சீரமைப்பு, புதிய சிலைகள் வடித்தல், வண்ணம் தீண்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
யாகசாலை பூஜைகள்
தொடர்ந்து திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் கடந்த பிப்ரவரி 7 -ஆம் தேதி துவங்கியது. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுற்று பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க சிவாசாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்வு
அதனை அடுத்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஒத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். பின்னர் மூலஸ்தானத்தில் அம்மனுக்கு புனிதநீர் உற்றி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.