Thai Somavara Pradosham: அனைத்திற்கும் ஆதியாக போற்றப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது பிரதோஷம். மாதத்திற்கு இரண்டு முறை பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை வணங்கினால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. 


தை மாதத்தில் வரும் பிரதோஷம் நாளை வருகிறது. தேய்பிறையில் வரும் இந்த பிரதோஷம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த திங்கள்கிழமையான சோமவாரத்தில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பாகும். தமிழ் மாதத்தின் முதல் மாதமாக கருதப்படும் தை மாதத்தில் வரும் இந்த பிரதோஷம் தனிச்சிறப்பு கொண்டதாக கருதப்படுகிறது. 


கோயிலுக்கு எப்போது செல்லலாம்?


சிவனுக்கு மிகவும் உகந்த நாளான பிரதோஷ நாளில் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்குச் செல்லலாம். ஆனால், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலுக்குச் செல்வது சிறப்பாகும். இந்த நேரத்தில் நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரையும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது. 


நாளை வரும் சோமவார பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்கினால், நீண்ட நாள் நீடித்து வந்த கடன் தொல்லை நீங்கும்  என்றும், ஆரோக்கியம் சீராகும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் என்று கருதப்படுகிறது.


இத்தனை நன்மைகளா?


பிரதோஷ நாளில் நடராஜராக காட்சி தரும் சிவபெருமானை வணங்கினால் வாழ்வில முன்னேற்றம் ஏற்படும். 


இந்த சோமவார பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. 


இந்த பிரதோஷ நாளில் திருமணம் ஆகாத பெண்கள்/ ஆண்கள் சிவனை வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. 


பிரதோஷ நாளில் சிவபெருமானை வணங்குவதால் தொழிலில் மேன்மை, கடன் பிரச்சினைகள்  தீரும்.
பிரதோஷ நாளில் சிவனையும், முருகனையும்


பிரதோஷ நாளில் லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானுக்கு காட்டப்படும் தீபாராதனைக்குப் பிறகு நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசித்தால் நம் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.