தை அமாவாசையின் சிறப்புகள் என்ன?


தை மாதம் வரக்கூடிய  அமாவாசையை தை அமாவாசை என்று அழைக்கிறோம்.  சூரியன் சந்திரன் இருவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றை ஒன்று சந்தித்தபடி ஒரே வீட்டில் பயணிப்பது.  பொதுவாகவே அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள், தர்ப்பணம் வழங்குவார்கள்  ஆனால் தை அமாவாசையில் தான் முன்னோர்களை  விண்ணுலகத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கும் நாளாக  புராணங்கள் கூறுகின்றது.  ஆடி அமாவாசை தினத்தன்று பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் தை  அம்மாவாசை அன்று  மீண்டும்  ஆன்மாவின்  உலகத்தில் ஆன்மாக்கள் புறப்பட்டு  செல்லும்  நாள் என்று கூறுகிறார்கள். 


விண்ணுக்கு செல்லும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவது எப்படி?


தாய் தந்தையர் மற்றும் தாத்தா பாட்டி  சிலருக்கு கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி வரை சந்தித்திருக்க வாய்ப்புண்டு.  ஆனால் அதற்கு மேல் நம்முடைய முன்னோர்களை சந்தித்திருக்க வாய்ப்பில்லை  அப்படிப்பட்ட  முன்னோர்களின் சந்திப்பில்லாதவர்களிடமிருந்து வாழ்த்துக்களை பெறுவதற்காக  தான்  அமாவாசை உகந்த நாளாக நாம் கொண்டாடுகிறோம்.  தை அமாவாசை தினத்தன்று நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது  தர்ப்பணம்  செய்வது  மற்றும் அவர்களின் மனதில்  நினைத்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் பெருகும் நோயில்லா வாழ்க்கை கிடைக்கும் நீண்ட ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்  நம் சந்ததியினருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் அதன் மூலமாக நல்ல வாழ்க்கையும் அமையும்.  


பிப்ரவரி 9ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல்  தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி  அதிகாலை 4:30 மணிக்குள்  அம்மாவாசைக்கு நடைபெறுகிறது.  இந்த சமயத்தில் முன்னோர்களின் நினைத்து  விரதம்  இருத்தல் வழிபாடு செய்தல் போன்றவை அவர்களின் ஆசீர்வாதத்தை நமக்கு பெற்றுத் தரும். 


தை அமாவாசையும், முன்னோர்களின்  ஆசீர்வாதமும்  !!!


தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமா ? என்றால் நிச்சயமாக கிடைக்கும்.  மேலும் சில வழிகளில் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை தை அமாவாசை தினத்தன்று பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.  காலை எழுந்து  வீட்டில் சமைக்கும்  உணவை எடுத்துக் கொண்டு  இல்லாதவர்களுக்கு தானமாக வழங்குங்கள்.  காலை எழுந்ததும் காகத்திற்கு உணவளியுங்கள்.  மேலும் முன்னோர்களின் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்து சாஷ்டாங்கமாக  முன்னோர்களின் படங்களுக்கு  முன்பாக வணங்கி, அவர்களை  மனமுருகன் நினைத்து வருவது .  முன்னோர்களைப் பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருந்தால்  அவர்களுடைய  புகழை  பற்றி  அடுத்தவர்களிடம் கூறி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.   இதற்கு முன்பாக ஏதோ  காரணங்களுக்காக அம்மாவாசை தினத்தை நீங்கள் புறக்கணித்து இருக்கலாம்  இந்த தை அமாவாசை தினத்தை புறக்கணிக்காதீர்கள். 


 தை அமாவாசை  தினத்தில்  முன்னோர்களை மகிழ்விப்பது எப்படி ?


 அமாவாசை தினத்தில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம், திதி கொடுக்கலாம்.  இப்படி என்னால் செய்ய முடியவில்லை, செய்வதற்கான வாய்ப்புகள் கிட்ட வில்லை என்று எண்ணி இருக்கும் நபர்களுக்கு  அருகில் இருக்கும்  கோ சாலைகளுக்கு சொல்லுங்கள்  அங்கு  இருக்கும் மாடுகளுக்கு உணவளியுங்கள்.  மாடுகளுக்கு அகத்திக்கீரை,  வாழைப்பழம்  புல் வைக்கோல் போன்றவை  கொடுப்பதில் மூலமாக உங்களுடைய முன்னோர்களின் சாபத்தை உங்களால் போக்க முடியும்.  தாய் தந்தையின்  காலில் விழுந்து  ஆசீர்வாதம் வாங்குவது  பிரம்மாண்டமான சிறப்பு உள்ளது. 


 காகத்திற்கு உணவு வையுங்கள் :


 சனிபகவான் கர்மகாரகன் ஒவ்வொரு மனிதனும்  வாழ்க்கையில்  செய்யும்  நல்லது மற்றும் கெட்டவைகளை வைத்து  அவர்களுக்கு நீதி வழங்குவது சனிபகவானின் வேலை.  சனியின்  வாகனமான  காகத்திற்கு   எந்த நேரத்தில் வேண்டுமானாலும்  உணவளிக்கலாம்  வெள்ளிக்கிழமை அமாவாசையும் சேர்ந்து வருவதால் மிகப் பெரிய  மங்களகரமான  காரியங்களை செய்வதற்கு ஏதுவாக அமையும்.   நம்முடைய மூதாதையர்கள் காகத்தின்  உருவத்தில்  நம்முடைய வீட்டுக்கு வந்து  நாம்  வைக்கும் உணவுகளை  உண்டு செல்கிறார்கள் என்பது ஐதீகம்.  அந்த வகையில் நம்முடைய மூதாதையர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மிடம் இருந்து  பெற்றுச் செல்லும்போது  உணவுகளை உண்டு  மகிழ்ச்சி அடைந்து  பின் அவர்களுடைய ஆன்மா நம்மை வாழ்த்தும்  என்பதுதான் உண்மை. 


 தை அமாவாசை  விரதம் :


 அமாவாசை தினத்தன்று விரதம் இருப்பவர்கள் இருக்கலாம்.  அதிலும் குறிப்பாக காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீரைத் தவிர  வேறு எந்த  உணவையும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.  மிகுந்த  பய பக்தி உடன் நம்முடைய மூதாதையர்கள்  நினைத்து  வழிபட வேண்டும்.  இப்படி செய்து வர அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு  கிடைக்கும்.  பலர் நினைக்கலாம்  விரதம் தானே  சுலபமாக  இருந்து விடலாம் என்று, ஆனால்  விரத  முறைகள் என்பது  அவரவர் குல  வழக்கத்திற்கு  ஏற்ப மாறுபடும் அவற்றை  கடைபிடிக்க வேண்டும்.  காலை வரை தொடங்கி மாலை விரதத்தை முடித்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தீபம் போட்டு வர உங்களுடைய சங்கடங்கள் விலகி சந்தோஷம்  பெருகும்.