திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திரளான இந்துக்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.




திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த நாட்களாக ஆடி அம்மாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த அம்மாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்று கருதப்படும் நிலையில், நீர் நிலைகள் உள்ள பகுதிகளான ஆற்றுப்பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.




அந்த வகையில் இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள் மற்றும் தர்ப்பபுள், வைத்து பிண்டம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு, பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இதேபோல் தூத்துக்குடியில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.




அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. அதன்படி தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பிரசித்தி பெற்ற ஜீவநதிகளில் ஒன்றாக விளங்கும் தாமிரபரணி நதிக்கரையில் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர். தாமிரபரணி நதியின் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தரப்படும் கொடுத்து வழிபாடு நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற படித்துறைகள் மற்றும் தீர்த்தக்கட்டங்களில் முன்னோர்கள் வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பாக நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை, வண்ணாரப்பேட்டை சிந்து பூந்துறை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற படித்துறைகளில் பொதுமக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு நிதி தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்களின் வருகையை ஒட்டி போலீசாரும் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.