குத்தாலம் அருகே வடிவுடையம்மன்  திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கண்டியூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான வடிவுடையம்மன் திருக்கோயில். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழாவை நடத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து கோயில் கட்டட வேலைகள், சிற்பம் அமைத்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிக்கப்பட்டது.


Thai Amavasai: பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வெள்ளிக்கிழமை தை அமாவாசை! சிறப்புகள் தெரியுமா?




திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த ஐந்தாம் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, யாகசாலையில் மஹா பூர்ணாகுதி நடைபெற்று. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் வைத்து சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக மேள வாத்தியங்கள் முழங்க வலம் வந்தனர்.


GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம் - இஸ்ரோவின் புதிய இலக்கு என்ன?




அதனைத் தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் கோபுர கலசங்களை வந்தடைந்தது. பின்னர், பரிவார தெய்வங்களான ஸ்ரீ பத்ரகாளி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆகியவற்றின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் வடிவுடையம்மன் திருக்கோயிலின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள்  ஓத மஹா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Lal Salaam Twitter Review: மாஸ் செய்தாரா மொய்தீன் பாய்? மதத்தை மனிதநேயம் வென்றதா? லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்!