திருமணங்கள் நடைபெறாத மற்றும் திருமணத்தில் தொடர்ந்து தடைகளை சந்தித்து வருபவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பெருவாரியான மக்களிடத்தில் நம்பிக்கையாக உள்ளது. திருமண தோஷங்கள் உள்ள நபர்களும் அதற்கென பிரத்யேக வழிபாடுகளை செய்வதால் விரைஇல் திருமணம் நடைபெறும் என்பது மக்களிடத்தில் ஐதீகமாக உள்ளது. அவற்றில் ஒருசில பிரத்யேக கோவில்கள் குறித்து இந்த தொகுப்பில் காணாலாம்.
கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் உள்ள திருமண தடை நீக்கும் கடவுளாக இருக்கும் கடவுள் கல்யாண சுந்தரேஸ்வரர். இந்த கோயிலுக்குச் சென்று மாலைகள், மஞ்சள், தேங்காய், குங்குமம், சீரகம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, சர்க்கரை ஆகியவற்றை வாங்கி, இந்த கோவிலில், சதி தேவியுடன் கல்யாண சுந்தரரை வணங்கி, மிகவும் பிரபலமான அர்ச்சனையான கல்யாண அர்ச்சனையை மாலை நேரத்தில் செய்துவிட்டு, மறுநாள் காலையில், எழுந்து வெறும் வயிற்றில் அர்ச்சனையின் போது பயன்படுத்திய எலுமிச்சை பழத்தினை சாறாக்கி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது, தமிழகம் முழுவதும் இருந்து வரும் கல்யாண சுந்தரேஸ்வரரின் பக்தர்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைந்ததும் அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்றும், நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், விரைவில் திருமணம் நடப்பது உறுதியாகிவிடும். இதனால் தான் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் தெய்வீக தலங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.
நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி
சென்னையில் இருந்து மகாபலிபுரத்துக்ச் செல்லும் வழியில் அமைந்துள்ள நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினால், விரைவில் திருமணம் நடப்பதற்கான வரங்களை நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி வழங்குவார் என்று கூறப்படுகிறது. உள்ளூர் வாசிகள் கூறும் புராணத்தின் படி, கடவுள் விஷ்ணு ஒரு துறவியின் 360 மகள்களை மணந்ததாகவும், திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படும் நபர்கள் திருவிடந்தையில் அமைந்துள்ள நித்ய கல்யாணப்பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமானால், நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலுக்குச் செல்லுங்கள் என்று பலரும் கூறுகின்றனர். ஒரு ஜோடி மாலைகள் வாங்கி அர்ச்சனை செய்து, மாலைகளை கழுத்தில் போட்டுக் கொண்டு கோவிலை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். பின்னர் வீட்டில் உள்ள பூஜை அறையில் மாலையை போட்டுவிட்டு, திருமணம் முடிந்து பழைய மாலையுடன் வந்து, மீண்டும் இரண்டு மாலைகள் வாங்கி, ஜோடியாக கோவிலைச் சுற்றி வரவேண்டும், அவ்வாறு செய்துவிட்டு பழைய மாலையை கோவிலில் உள்ல விருட்ச மரத்தில் போட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
திருவிண்ணைநகர் கோவில்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவிண்ணைநகர் பகுதியில் உள்ள, கடவுள் விஷ்ணு கோகிலாம்பாயை திருமணம் செய்து கொண்ட திருமணக் கோலத்தில், திருமணமாகத பக்தர்களுக்கு திருமண வரங்களை அளித்து வருகிறார். பக்தர்களிடையே உள்ள நம்பிக்கையின்படி, திருவிண்ணைநகர் கோயிலுக்குச் செல்வதால் திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது மக்களிடத்தில் பெரும் ஐதீகமாக உள்ளது. திருமணமாக இந்த கோயிலில் ஒரு வேத சடங்கு செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது சொல்லப்படுகிறது. இந்த திருவிண்ணைநகர் கோயில் என்பது தென்னிந்தியாவின் ஸ்ரீ வைஷ்ணவ வழிபாட்டு முறையின் 108 திவ்ய தேசங்களில் 13வது ஆலயம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
தென் திருப்பதி
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கோயிலில், திருப்பதி பாலாஜியின் மூத்த சகோதரர் என்று நம்பப்படும் விஷ்ணு பகவான் குடி கொண்டிருக்கிறார். புகழ்பெற்ற ஆழ்வார்கள் இந்த கடவுளின் சக்திகளை போற்றும் மங்களாசாசனம் பாடல்களை இந்த கோயிலில் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருவோணத்தின் போது, தென் திருப்பதியில் உள்ள பாலாஜியின் பக்தர்கள் பாவங்களிலிருந்து தங்களைத் தாங்களே விடுவிக்க சந்தனம் மற்றும் குங்குமத்தை சமர்ப்பிப்பார்கள். மணி, ஆரத்தி கரண்டி போன்ற பூஜைப் பொருட்களைச் சமர்ப்பித்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாவங்களிலிருந்தும் விடுபடலாம் எனவும் நம்பப்படுகிறது. தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தால் தம்பதிகளிடையே பரஸ்பர ஒற்றுமை மற்றும் திருமண மகிழ்ச்சியை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.
மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள லால்குடி எடையத்துமங்கலம் கிராமத்தில் மாங்கல்ய மகரிஷியால் திருமண வரம் அளிக்கும் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில் உள்ளது. வசிஸ்டர், அகஸ்தியர்,பைரவர் ஆகியோரின் திருமணங்கள் இக்கடவுளின் அருளால் நடத்தப்பட்டதாக சொல்லப் படுகிறது. மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாமல் வந்து செல்லும் முக்கிய கோயிலாகும். புராணத்தின் படி, மாங்கல்ய மகரிஷி உத்திர நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் ஒரு சில ரிஷிகள் மற்றும் முனிவர்களின் திருமணங்களை நடத்தியதாகவும், அவர் நடத்திய தவத்தின் மூலம் அவர் பெற்ற மாபெரும் சக்தி அவரின் உள்ளங்கையில் உள்ளதாகவும் புராணம் கூறுகிறது. இங்குள்ள கடவுள் தேவதைகளின் குருவாக இருப்பதால், திருமணங்கள் வெற்றியடைய ஆசீர்வதிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த தேவதைகள் திருமணத்தின் ஒவ்வொரு நல்ல முகூர்த்தத்திலும், மேலிருந்து பூமிக்கு வருகை தருகிறார்கள் என்றும், மேலும் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பதற்காக பூமிக்கு வரும் தேவதைகள் மாங்கல்ய மகரிஷியின் கைகளுக்கு அதிக சக்தியை அளிக்க மாங்கல்யேஸ்வரரை பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் புரானத்தின் அடிப்படையில் நம்பப்படுகிறது. உத்திர நட்சத்திரத்தன்று தன்னை வழிபடுபவர்களுக்கு சக்தி வாய்ந்த வரங்களை வழங்குகிறார் என்றும் நம்பபடுகிறது. இக்கோயிலில் கல்யாணோத்ஸவம் தமிழ் மாதம் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடைபெறும், இதில் கலந்து கொள்ள பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகை புரிகிறார்கள். பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்களின் நாட்காட்டியில் பங்குனி உத்திரம் மிக முக்கியமானது. திருமணம் தொடர்பான எந்த தடைகளும், தெய்வங்களுக்கு பூஜை செய்வதன் மூலம் தானாகவே மறைந்துவிடும் எனப்தும் ஐதீகமாக உள்ளது.
கல்யாண வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசஸ்வாமி கோவில்
திருப்பதி மங்காபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தேவி ஆகியோர், அகஸ்தியர் திருமணம் முடிந்த பிறகு ஆறு மாதங்கள் தங்கியிருந்த காரணத்தால் புதுமணத் தம்பதிகள் மலை வழியாகச் செல்லக்கூடாது என்று அகஸ்தியர் அவர்களிடம் வேண்டி கேட்டுக்கொண்டதால், வெங்கடாசலபதியும் பத்மாவதியும் தங்கியிருக்கும் மலை வழியாக புதுமண தம்பதிகள் யாரும் செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. மேலும், இங்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அனைவரின் விருப்பமும் நிறைவேற கடவுள் அருள் புரிகிறார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக திருமணம் தொடர்பான பிரச்சினைகளை நல்லபடியாக தீர்க்க, திருப்பதிக்கு அருகில் அமைந்துள்ள சீனிவாச மங்காபுரம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்றால் நல்லபடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். திருமண பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் அனைவரும் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. இவ்வாறு புராதணப் புகழ் பெற்ற இக்கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் கடவுளை வேண்டிக்கொண்டு கலந்துகொள்வதன் மூலம், திருமணம் தொடர்பான துயரங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்குமாம். வழிபாட்டின் முடிவில், பூசாரி கொடுக்கும் மஞ்சள் கங்கனம் ஒன்றினை வலது கையில் கட்டுவதால் விரைவில் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. உள்ளூர் மக்காளின் நம்பிக்கையின்படி திருப்பதியில் இறைவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு அவரை வழிபட்டால், திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்ட பலன்களைப் பெறலாம் என கூறுகின்றனர்.