மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலில் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவ விழா  வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி  புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றிரவு தீமிதி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக  சீர்காழி , மணிகூண்டு மங்கையர்க்கரசி விநாயகர் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட  பெண்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.




அதேபோல் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


Old Age Pension: முதியோர் உதவித் தொகை ரூபாய் 1,200ஆக உயர்வு; அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடி முடிவு..!




இந்த பால்குடம்  ஊர்வலத்தில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அருணா பால்குடம் எடுத்தது நேர்த்திக்கடன் செலுத்தினர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அருணா பால்குடம் சொந்த ஊர் சீர்காழி என்பதும், இவர் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial ன்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண