108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த  பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம்.

 





மதுரை மாவட்டம் மேலூர் அழகர் கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில்,  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர்.

 

 





108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி திருவிழாவான இன்று அதிகாலை 6 மணிக்கு மேல்  பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.