தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

Kandha Sashti : கந்தசஷ்டி மூன்றாம் நாள்.. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அன்ன வாகன காட்சி.. பரவசத்தில் பக்தர்கள்..

அதன்படி கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் பழனி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று முன்தினம் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ெதாடங்கியது. இதற்கு கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார்.

Pope : ஆபாச படங்களை பார்க்கும் பாதிரியார்கள்..போன்களில் இருந்து டெலிட் செய்யுங்க...போப் ஆண்டவர் வேண்டுகோள்..!

கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் மணிமாறன், ராஜசேகரன், தேனி உதவி ஆணையர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரத்து 705 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 393 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 999 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட 10 கிலோ 152 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Prime Minister Modi: வருகிற 11-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. வெளியான தகவல்கள் என்னென்ன?

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 900-ம், தங்கம் 324 கிராம், வெள்ளி 14 கிலோ 895 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 491-ம் கிடைத்தன.

AK 62 Heroine Update : ஐந்தாவது முறையாக இணைகிறதா இந்த ஜோடி? காற்றில் கசிந்த AK 62 தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்

இதன்மூலம் கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 605 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 1 கிலோ 323 கிராம், வெள்ளி 25 கிலோ 47 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 884-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண